இலங்கை கிரிக்கெட்டிற்கு ICC தடை அமுலில் உள்ள போதிலும் இலங்கை தேசிய அணி பங்குபற்றும் போட்டிகளுக்கு அது பாதிப்பை ஏற்படுத்தாது என ஊடக அறிக்கையில் தெரிவிப்பு.
இலங்கை கிரிக்கெட்டுக்கு தடை விதித்து சர்வதேச கிரிக்கெட் பேரவை நவம்பர் 10ஆம் திகதி எடுத்த தீர்மானத்திற்கு இன்று (21) நடைபெற்ற ஐசிசி நிர்வாக சபை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் தடை அமுலில் உள்ள போதிலும் இலங்கை தேசிய அணி பங்குபற்றும் போட்டிகளுக்கு அது பாதிப்பை ஏற்படுத்தாது என குறித்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு வழங்கப்படும் பணத்தை கடுமையான கட்டுப்பாடுகளுக்கு அமைய விடுவிக்க தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இந்த கூட்டத்தில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா கலந்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை கிரிக்கெட்டிற்கு ICC தடை அமுலில் உள்ள போதிலும் இலங்கை தேசிய அணி பங்குபற்றும் போட்டிகளுக்கு அது பாதிப்பை ஏற்படுத்தாது என ஊடக அறிக்கையில் தெரிவிப்பு.
Reviewed by Madawala News
on
November 21, 2023
Rating:
No comments: