முசாரப் எம்.பி.யின் அழைப்பில் போக்குவரத்து அமைச்சர் கலந்து கொண்ட பொத்துவிலின் வரலாற்று நிகழ்வு

 பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முசாரப் அவர்களின் பெரும் முயற்சியினால் பொத்துவில் உப பஸ் டிப்போவானது பிரதான டிப்போவாக தரமுயர்த்துவதற்கான நிகழ்வு   ஞாயிற்றுக்கிழமை  இடம்பெற்றது.


பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தாரணி எஸ்.எம்.எம்.முசாரபின் அழைப்பின் பேரில் பிரதம அதிதிகளாக போக்குவரத்து,நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோர் கலந்து கொண்டு பிரதான பஸ் டிப்போவை திறந்து வைத்தனர்.

கௌரவ அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினரும், அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான டபிள்யு டி வீரசிங்க, இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் பொறியியலாளர் லலித் டி அல்விஸ், தேசிய அபிவிருத்தி மற்றும் கட்டுமானக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பொறியியலாளர் குசான் தேவிந்தா மற்றும் அரசாங்க அதிகாரிகள், திணைக்களங்களின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதன் போது பொத்துவில் பஸ் டிப்போவுக்கு போக்குவரத்து அமைச்சரினால் நவீன சொகுசு பஸ் வண்டி வழங்கி வைக்கப்பட்டதுடன் 60 மில்லியன் ரூபாய் செலவில் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்லும் அதிதிகளினால் நட்டி வைக்கப்பட்டது.


பொத்துவில் உப பஸ் டிப்போவானது பிரதான டிப்போவாக தரமுயர்த்துவதற்கான தீர்மானம் கடந்த வருடம் அமைச்சு மட்டத்தில் எட்டப்பட்டிருந்தது. நாட்டின் பொருளாதார பிரச்சினை காரணமாக பொத்துவில் பஸ் டிப்போவில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்திக்கென பணம் ஒதுக்குவதில் பல சிரமங்கள் காணப்பட்டன.

குறித்த காலப் பகுதியில் பொத்துவில் பஸ் டிப்போ அமைந்துள்ள நிலத்தின் சட்ட ரீதியான உரிமை மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முசாரப் மேற்கொண்ட பெரும் முயற்சியின் காரணமாக பஸ்டிப்போவுக்காக உரிமம் சட்டரீதியாக வழங்கப்பட்டிருந்தது.


இந்நிலையில் குறித்த பஸ்டிப்போவின் துரித அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான முதற்கட்ட நிதியாக சுமார் 60 மில்லியன் ரூபாவினை பாராளுமன்ற உறுப்பினர் எஸ் எம் எம் முஷாரப் அவர்களின் வேண்டுகோளுக்கமைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் பணிப்புரைக்கமைய ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆரம்பக் கட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

பஸ் டிப்போவாக தரமுயர்த்தும் நிகழ்வில் அதிதிகள் கோலாகலமாக அழைத்து வரப்படுவதுடன் மாணவர்களின் கலை, கலாசார நிகழ்ச்சிகள் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கதாகும். அத்தோடு அதிதிகள் இங்கு நினைவுச்சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

பொத்துவில் பிரதேசத்திலுள்ள நிறுவனங்கள், பொது அமைப்புகள், விளையாட்டுக் கழகங்கள், இளைஞர் அமைப்புகள்,பள்ளிவாசல்கள், பொதுமக்கள் என பலரும் ஒன்றினைந்து ஊரின் விழாவாக ஏற்பாடு செய்திருந்தமை விசேட அம்சமாகும்.


இந்நிகழ்வில் பெருந்திரளான பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தமை சிறப்பம்சமாகும்.


பொத்துவிலுக்கான உப பஸ் டிப்போவை பிரதான டிப்போவாக தரமுயர்த்தித் தருமாறு அம்பாரை மாவட்டத்திலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பல ஆண்டுகளாக பொத்துவில் மக்கள் கோரிக்கை முன்வைத்திருந்தபோதும் இதனை அவர்கள் கணக்கிலும் எடுக்காமல் இருந்து வந்த நிலையில் பொத்துவில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரான சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முசாரப் அவர்கள் இதனை  பெரும் முயற்சியி்னால் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

முசாரப் எம்.பி.யின் அழைப்பில் போக்குவரத்து அமைச்சர் கலந்து கொண்ட பொத்துவிலின் வரலாற்று நிகழ்வு முசாரப் எம்.பி.யின் அழைப்பில் போக்குவரத்து அமைச்சர் கலந்து கொண்ட பொத்துவிலின் வரலாற்று நிகழ்வு Reviewed by Madawala News on November 20, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.