வீட்டினுள் உயிரை மாய்த்துக்கொண்ட இளம் கணவன் - மனைவி
திருக்கோவில் பிரதேசத்தில்
கணவனும் மனைவியும் இன்று (21) செவாய்கிழமை அவர்களது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக திருக்கோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருக்கோவில் 3 பகுதியைச் சேர்ந்த 28 வயதான மனோககரன் தேவதர்சன் மற்றும் மற்றும் 23 வயதுடைய ரவிந்திரகுமார் நிலுயா இருவரும் 3 வருடத்திற்கு முன் திருமணமாகி இரண்டு வயதுடைய பெண் குழந்தை இருப்பதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், குறித்த இருவரின் சடலங்களும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மரணம் தொடர்பான காரணம் உள்ளிட்ட மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வீட்டினுள் உயிரை மாய்த்துக்கொண்ட இளம் கணவன் - மனைவி #இலங்கை
Reviewed by Madawala News
on
November 21, 2023
Rating:

No comments: