பலஸ்தீன் மக்களை பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு மாவட்ட பள்ளிவாயல்கள், ஐக்கியநாடுகள் சபையிடம் கோரிக்கைநேற்றைய தினம் சுமார் 500ற்கும் மேற்பட்ட கொழும்பு மாவட்ட பள்ளிவாயல்களுடைய நிர்வாக சபை உறுப்பினர்கள் வருடாந்த பள்ளிவாயல்களின் நிர்வாகிகளின் செயலமர்வில் கலந்து கொள்வதற்காக கொழும்பு 7 ல் அமைந்துள்ள டங்கன் வைட் கலாசாலையில் ஒன்று கூடினர்.

இந்த செயலமர்வு கொழும்பு மாவட்ட முஸ்லிம் பள்ளிவாயல்கள் சம்மேளனத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததோடு அதன் தலைவர் சிரேஷ்ட சட்டதரணி சிராஸ் நூர்தீன் அவர்களது தலைமையில் இடம்பெற்றது.இச்செயலமர்வின் அடிப்படை தொனிப்பொருள் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பலம் வாய்ந்த பள்ளிவாயல் நிர்வாகிகளை உருவாக்குவதாகும்.

இந்நிகழ்வில் ஜாமியா நளிமியாவின் பணிப்பாளர் அஷ் ஷெய்க் அகார் முஹம்மத்,வக்ஃப் தீர்ப்பாயத்தின் தலைவர் டாக்டர் அப்துல் மஜீத்,முஸ்லிம் கலாச்சார திணைக்களம் சார்பாக ஷெய்க் அலா மொஹம்மட் மற்றும் சிரேஷ்ட சட்டதரணி மாஸ் யூசுஃப் ஆகியோர் பிரதான பேச்சாளராக கலந்து கொண்டனர்.

மேலும் பலஸ்தீன் சம்மந்தமான விசேட அமர்வுகள் இடம்பெற்றதோடு இந்நிகழ்வில் பலஸ்தீனத்தூதவர் மற்றும் சிவில் சமூகத்தலைவர்களும் வருகை தந்திருந்தனர். சிரேஷ்ட ஊடகவியலாளர் அமீன் இஸ்ஸதீன் அவர்கள் மூலம் இஸ்ரேலியர்கள் மூலம் பலஸ்தீன பொதுமக்களுக்கு செய்யப்பட்ட அட்டூழியங்கள் வரலாற்று ரீதியாக விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.அதன் பின் சட்டதரணி ருஸ்தி ஹபீப் மூலம் பலஸ்தீன் மக்களை பாதுகாப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபைக்கு விடுக்கும் கோரிக்கை வாசிக்கப்பட்டு செயலமர்வில் கலந்து கொண்டிருந்த அனைவரும் அந்த ஆவணத்தில் கையொப்பமிட்டனர்.

பலஸ்தீன தூதுவர் மூலம் பலஸ்தீன் தேசிய கொடியுடனான சால்வையை அனைத்து பிரமுகர்களுக்கும் அணிவித்ததுடன் பலஸ்தீன் மக்களுக்கான விசேட து ஆ பிரார்தனையும் இடம் பெற்றது.

பலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேலிய சியோனிஸ்ட் ஆட்சியியாளர்கள் மூலம் மேற்கொள்ளப்படும் அட்டூழியங்களுக்கு எதிராக
ஐக்கிய நாடுகளின் அலுவலகத்திற்கு இலங்கை முஸ்லிம்களின் கோரிக்கை.பாலஸ்தீனத்தில், குறிப்பாக இஸ்ரேலின் சியோனிச பயங்கரவாத அரசால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காசாவில் அன்றாட அட்டூழியங்களை இலங்கை முஸ்லிம்கள் என்ற முறையில் நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையாளர் அக்டோபர் 28, 2023 தேதியிட்ட தனது கடிதத்தில் இது தொடர்பாக கடுமையான கண்டனத்தை தெரிவித்த போதிலும், பாலஸ்தீன மக்களின் அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் ஐக்கிய நாடுகள் சபை தனது பார்வையில் அலட்சியம் காட்டுகிறது.


இன்றுவரை, உங்கள் அமைப்பு இந்தப் பிரதேசத்தில் அமைதியையும் பாதுகாப்பையும் சீர்செய்யத் தவறிவிட்டது, எந்த நடைமுறை காரணமும் இல்லாமல் நீண்ட காலமாக மௌனமாக இருந்து வருகிறது. உண்மையில், பிர உதவி ஏதுமின்றி, அவர்களின் வாழ்க்கை முறை முற்றிலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி, காசா பகுதி இன்று புதைகுழியாக மாறியுள்ளது.

இக்கொடுமைகளைத் தடுப்பதற்கும், மனிதகுலத்தின் துன்பங்களையும் அதன் அடிப்படைத் தேவைகளையும் மேம்படுத்தவும் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் எதுவும் இதுவரை மேற்கொள்ளப் படவில்லை. பாலஸ்தீனத்தில் குழந்தைகள் மற்றும் பாதிக்கப்பட மக்களுக்கு பாதுகாப்பு அரண் செயல்படுத்த ஒரு பக்கச்சார்பற்ற அமைதி காக்கும் நடவடிக்கை மேட்கொள்ளவேண்டும் .

எனவே, உலகளாவிய மனித உரிமைச் சட்டங்களுக்கு உட்பட செயல்பட்டு, இஸ்ரேலின் தீய சக்திகளுக்கு எதிராக வலுவாகச் எதிர்த்து, அவர்களை மனிதகுலத்திற்குத் தீங்கு இழைத்த உலகளாவிய குற்றவாளிகளாக அறிவித்து, பாலஸ்தீன தேசத்தின் நலனுக்காகவும், பாலஸ்தீனத்தின் எதிர்கால சந்ததியினருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் இந்த இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்த வலுவான சக்தியுடன் செயல்படுமாறும் உங்களை வலியுறுத்துகிறோம்.
பலஸ்தீன் மக்களை பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு மாவட்ட பள்ளிவாயல்கள், ஐக்கியநாடுகள் சபையிடம் கோரிக்கை பலஸ்தீன் மக்களை  பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு மாவட்ட பள்ளிவாயல்கள்,  ஐக்கியநாடுகள் சபையிடம் கோரிக்கை Reviewed by Madawala News on November 13, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.