கணவர் வெளிநாட்டில்.... மனைவி கழுத்தறுக்கபட்டு வீட்டினுள் கொலை - கணவரின் சகோதரன் தலைமறைவுகிரிந்திவெல ஊராபொல பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து கழுத்தறுத்து மர்மமான முறையில் கொலைசெய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கிரிந்திவெல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.உயிரிழந்தவர் 35 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயான கே.ஏ.சஞ்சீவனி என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் பல வருடங்களாக வெளிநாட்டில் தொழில் செய்து வருவதாகவும் குறித்த பெண் கணவரின் தாய், தந்தை மற்றும் சகோதரருடன் கணவரின் வீட்டில் வசித்து வருவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.உயிரிழந்த பெண் வீட்டின் வரவேற்பறையில் கிடப்பதைக் கண்ட கணவரின் தாயார், சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் தாயாருக்கு அறிவித்ததுடன், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.பூகொட நீதிமன்ற பதில் நீதவான் கமல் சம்பந்த பெரும பிரேத பரிசோதனையை மேற்கொண்டதுடன், சடலத்தை வத்துபிட்டிவல வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல உத்தரவிட்டதுடன், அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு பணித்துள்ளார்.கொலை செய்யப்பட்ட பெண்ணின் மைத்துனர் (கணவரின் சகோதரன்) கொலைக்குப் பின்னர் தலைமறைவாகியுள்ளதுடன், கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
கணவர் வெளிநாட்டில்.... மனைவி கழுத்தறுக்கபட்டு வீட்டினுள் கொலை - கணவரின் சகோதரன் தலைமறைவு கணவர் வெளிநாட்டில்....  மனைவி கழுத்தறுக்கபட்டு வீட்டினுள் கொலை -  கணவரின் சகோதரன் தலைமறைவு Reviewed by Madawala News on November 08, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.