இலங்கை கிரிக்கெட்டுக்கு ICC யினால் விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து இன்று முக்கிய தீர்மானம் எடுக்கப்படுகிறது.இலங்கை கிரிக்கெட்டுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் தடை குறித்து இன்று தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.


இந்தியாவின் அகமதாபாத்தில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட உள்ளது.


சர்வதேச கிரிக்கட் பேரவையின் பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் நடைபெறவுள்ள கூட்டத்தில் இது தொடர்பில் விரிவான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இலங்கை மீது விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்பட்ட வேண்டுமானால், அதற்காக விதிக்கப்படும் நிபந்தனைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப் படவுள்ளது.


அத்துடன், அடுத்த வருடம் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப் படவுள்ளது.


இக்கலந்துரையாடலில் இலங்கை கிரிக்கெட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் பார்வையாளர் மட்ட பிரதிநிதியாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா கலந்துகொள்ளவுள்ளார்.


சர்வதேச கிரிக்கட் பேரவையினால் இலங்கை கிரிக்கட் மீது விதிக்கப்பட்ட கிரிக்கெட் தடை காரணமாக, இலங்கை கிரிக்கெட் தலைவரால் செயற்பாட்டு மட்டத்தில் இந்த கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை.
இலங்கை கிரிக்கெட்டுக்கு ICC யினால் விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து இன்று முக்கிய தீர்மானம் எடுக்கப்படுகிறது. இலங்கை கிரிக்கெட்டுக்கு ICC யினால் விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து இன்று முக்கிய தீர்மானம் எடுக்கப்படுகிறது. Reviewed by Madawala News on November 21, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.