நாடளாவிய ரீதியில் 198 அதி கூடிய புள்ளிகளை பெற்ற நான்கு மாணவர்கள் மற்றும் ஒரு மாணவிஇவ்வாண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி ஐந்து மாணவர்கள் தலா 198 புள்ளிகளைப் பெற்று அதிகூடிய புள்ளிகளைப் பெற்று நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற முடிந்தது.


*கம்பஹா சுமேதாவைச் சேர்ந்த ஷெனுல் அக்மீமன,

*அனுராதபுரம் புனித ஜோசப் ஆண்கள் கல்லூரியின் நவங்க ஹன்ச ராஜ் பொன்சேகா,


*கம்பஹா கோதமி கல்லூரியின் ஹிருஷ கேஷான் விஜேசிங்க,

*அலுபோமுல்ல, பண்டாரகம மஹா பெல்லான ஆரம்பப் பாடசாலையின் ஹெவிடு ஹஸரல் பெரேரா மற்றும்

* பதுளை விஹாரமஹாதேவி மகளிர் உயர்தரப் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவி W.M.துலினி சாந்தினி


ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் மொத்தமாக 200 மதிப்பெண்கள் உள்ள நிலையில், அதில் 198 மதிப்பெண்கள் பெற்றிருப்பது அந்த ஐந்து மாணவர்களின் பெரும் சாதனை என்றும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தெரிவிக்கின்றனர்.


புலமைப்பரிசில் பரீட்சையை இலகுவாக எதிர்கொண்டதாகவும், அதிக சித்திகளைப் பெற முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் வெற்றி பெற்ற மாணவர்கள் தெரிவித்தனர்.

கல்வியை மேம்படுத்தி நாட்டுக்கு சேவை செய்வதே தமது நோக்கம் எனவும் தெரிவித்தனர்.

நாடளாவிய ரீதியில் 198 அதி கூடிய புள்ளிகளை பெற்ற நான்கு மாணவர்கள் மற்றும் ஒரு மாணவி நாடளாவிய ரீதியில் 198 அதி கூடிய புள்ளிகளை பெற்ற நான்கு மாணவர்கள் மற்றும் ஒரு மாணவி Reviewed by Madawala News on November 17, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.