கடலுக்குச் சென்ற படகு கவிழ்ந்ததில் ஜப்பானிய பிரஜை உட்பட நால்வர் காணாமல் போயிருந்த நிலையில் பத்திரமாக மீட்பு.



கடலுக்குச் சென்ற படகு கவிழ்ந்ததில் ஜப்பானிய பிரஜை உட்பட நால்வர் காணாமல் போன நிலையில் அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



மாரவில, முகுதுகட்டுவ பிரதேசத்தில் நேற்று 18ஆம் திகதி மாலை 05.30 மணியளவில் ஜப்பானியர் உட்பட 05 பேர் சிறிய டிங்கி படகில் கடலுக்கு மீன்பிடிக்கும்போது மழை பெய்ததால் படகு கடலில் கவிழ்ந்தது.



படகை ஓட்டிச் சென்றவர்கள் இது குறித்து கரையில் இருந்த மற்றொரு மீனவருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி படகு கவிழ்ந்ததாக கூறப்படும் பகுதிக்கு சென்ற மற்றொரு குழுவினர் படகை ஓட்டி வந்தவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.



எனினும், இதன்போது படகில் இருந்த ஏனைய நான்கு பேரும் காணாமல் போயுள்ளதாக படகின் உரிமையாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.



இந்நிலையில் கடற்படையினரின் உதவியுடன் காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்த நிலையில் குறித்த நால்வரும் தற்போது மீட்கப்பட்டு கரைக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலுக்குச் சென்ற படகு கவிழ்ந்ததில் ஜப்பானிய பிரஜை உட்பட நால்வர் காணாமல் போயிருந்த நிலையில் பத்திரமாக மீட்பு. கடலுக்குச் சென்ற படகு கவிழ்ந்ததில் ஜப்பானிய பிரஜை உட்பட நால்வர் காணாமல் போயிருந்த நிலையில் பத்திரமாக மீட்பு. Reviewed by Madawala News on November 19, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.