நான் ஜனாதிபதி செயலகத்திற்கு செல்வது கிடையாது - ஏனென்றால் அங்கு எனக்கு நஞ்சூட்டப்படலாம்விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தனக்கு நஞ்சூட்டப்படலாம் என்று அச்சம் வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் செய்தியாளர்களை சற்றுமுன்னர் சந்தித்த அமைச்சர் மேலும் கூறியதாவது.

கிரிக்கெட் நிறுவனம் எந்த அடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்திடம் எமக்கு தடையை கோரியது?


அப்படி தடையை கோரியவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை
என்ன?

சட்டம் ஒழுங்கு இல்லையா?

நான் இடைக்கால சபையை அமைக்க முன்னர் பலருடன் பேசினேன் ஜனாதிபதி செயலகத்திற்கு நான் செல்வது கிடையாது. அங்கு எனக்கு நஞ்சூட்டப்படலாம் என்ற அச்சம் இருக்கிறது.


ஜனாதிபதியை சந்திக்கச் சென்றாலும் அங்கு நீர் கூட அருந்தமாட்டேன்.

ஏனெனில் அதில் நஞ்சூட்டப்பட்டிருக்கலாம்.


நான் திங்கட்கிழமை நீதிமன்றம் செல்லவுள்ளேன்.

எனது இடைக்கால சபைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கினால் அர்ஜ/னவை கொண்டு கிரிக்கெட்டை முன்னேற்றும் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.


ஒரு வேலையை செய்ய முடியாவிட்டால் இந்த அமைச்சும் எனக்கு தேவையில்லை.


ஜனா திபதிக்கும் சரியான தகவல்களை வழங்காமல் சில அதிகாரிகள் அவரை தவறாக வழி நடத்துகின்றனர்.


தற்போதைய சூழ்நிலையில் எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அதனால் தான் ஜனாதிபதி செயலகத்திற்கு கூட செல்ல முடியாத நிலை இருக்கிறது.


பாதாள உலகத்தை கொண்டு எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தலாம்.


எனது பாதுகாப்பை அதிகரிக்குமாறு அமைச்சர் ரிரான் அலஸ் பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடம்
கோரிக்கை விடுத்தேன்.

ஆனால் இன்னும் அதற்கு பதில் இல்லை.
நான் ஜனாதிபதி செயலகத்திற்கு செல்வது கிடையாது - ஏனென்றால் அங்கு எனக்கு நஞ்சூட்டப்படலாம் நான் ஜனாதிபதி செயலகத்திற்கு செல்வது கிடையாது - ஏனென்றால் அங்கு எனக்கு நஞ்சூட்டப்படலாம்  Reviewed by Madawala News on November 11, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.