" எதிர்பார்க்கப்படும் மஹ்தீ " - இட்டுக்கட்டப்பட்டு மக்களுக்கு வழங்கப்படும் பிழையான தகவல்களும் தெளிவும்."எதிர்பார்க்கப்படும் மஹ்தீ"
யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்த முன்னறிவிப்புக்களில் மஹ்தீ என்ற பெயரில் வர இருக்கும் ஓர் ஆட்சியாளர் பற்றிய செய்தி பிரபல்யமானது.

துரதிஷ்ட வசமாக அவரைப் பற்றிய பல பிழையான தகவல்கள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது.

ஹதீஸ்களில் வந்துள்ள தகவல்களின்படி அவர் ஓர் நபியோ வலியோ அல்ல, குழப்பங்களும் அநியாயங்களும் தலைவிரித்தாடும் காலத்தில் தோன்றும் ஓர் நீதமான ஆட்சியாளர் (கலீஃபா).

பாதிமா றழியல்லாஹு அன்ஹா அவர்களின் பரம்பரையைச் சேர்ந்தவராக இருப்பார், அவரது பெயர் முஹம்மத் அல்லது அஹ்மத் என்பதாகவும் அவரது தந்தையின் பெயர் அப்துல்லாஹ் என்பதாகவும் இருக்கும்.

கஃபதுல்லாஹ்வில் வைத்து, அவர்தான் மஹ்தீ என அடையாளம் காணப்பட்டு மக்கள் அவரை தம்மை ஆட்சி செய்யும் தலைவராக ஏற்றுக் கொள்வர். பிறகு ஏழு வருடங்கள் அவர் மிக நீதமான முறையில் ஆட்சி செய்து விட்டு மரணித்து விடுவார்.

அவரின் ஆட்சி காலத்தில் தேவையான இடங்களுக்கு போதிய அளவு மழை பெய்யும் பூமி செழிப்படையும், செல்வம் பெருகும். அவரது ஆட்சி காலத்தின்தான் பொய்யன் தஜ்ஜால் வருவான், அவரது ஆட்சி காலத்தின்தான் ஈஸா அலைஹிஸ் ஸலாம் அவர்கள் வானில் இருந்து பூமிக்கு இறக்கப்படுவார்கள். கலீஃபா மஹ்தீ இமாமாக நின்று தொழ வைக்க ஈஸா அலைஹிஸ் ஸலாம் மஃமூமாக நின்று தொழுவார்கள்.

கலீஃபா மஹ்தீ ஒரு நபர், ஈஸா அலைஹிஸ் ஸலாம் வேறொரு நபர் இருவரும் ஒருவரே என்ற கருத்து தவறானது.

அதே போல கலீஃபா மஹ்தியின் வருகைக்கு முன்பு இரு பெரும் அத்தாட்சிகளை அல்லாஹ் வெளிப்படுத்துவான். ரமழான் மாதத்தின் முதல் நாள் சந்திர கிரகணமும் அதே ரமழான் 15ம் நாள் சூரிய கிரகணமும் ஏற்படும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக கூறப்படும் செய்தி நபியின் பெயரில் இட்டுக்கட்டப்பட்ட ஓர் பொய்யான செய்தியாகும்.

தாரகுத்னீ என்ற ஹதீஸ் கிரந்தத்தில் இப்படி ஒரு ஹதீஸ் இருப்பதாகச் சொல்கிறார்கள். இமாம் தாரகுத்னீ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக இந்த செய்தியை பதிவு செய்யவே இல்லை. முஹம்மத் இப்னு அலீ கூறியதாகவே இதனைப் பதிவு செய்துள்ளார்கள்.

"ஸலாமுன் யா மஹ்தீ" என்ற அரேபியப் பாடல்கூட இந்நாட்களில் பலரும் மஹ்தீ பற்றி பேசுவதற்கு காரணமாக‌ அமைந்திருக்கலாம்.


நான்தான் மஹ்தீ என்று கூறிக் கொண்டு வரலாற்றில் பல பொய் மஹ்தீக்கள் தோன்றி இருக்கிறார்கள்,


எனவே எந்த ஒரு விடயத்தைப் பேசும்போதும், எழுதும் போதும் உண்மைகள் என்ன என்பதை அறிந்து எழுதவும் பேசவும் முயற்சிப்போம்.

- இர்ஷாத் மூமீன் -
27/04/1445
12/11/2023
" எதிர்பார்க்கப்படும் மஹ்தீ " - இட்டுக்கட்டப்பட்டு மக்களுக்கு வழங்கப்படும் பிழையான தகவல்களும் தெளிவும். " எதிர்பார்க்கப்படும் மஹ்தீ "  -  இட்டுக்கட்டப்பட்டு மக்களுக்கு வழங்கப்படும் பிழையான தகவல்களும் தெளிவும். Reviewed by Madawala News on November 12, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.