பலஸ்தீனில் 1967 இல் வகுக்கப்பட்ட எல்லைகளே இருக்க வேண்டும் ; துருக்கி ஜனாதிபதி எர்டோகன் வலியுறுத்தினார்துருக்கியின் ஜனாதிபதியாக ரிசெப் டாய்யிப் எர்டோகன் 2014 ஆம் ஆண்டிலிருந்து பதவியில் உள்ளார்.

தற்போது தீவிரமடைந்து வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில்,


காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்துகிறோம்.

இந்த போர் முடிந்ததும் காசாவில் அமைதியையும், அது ஒரு சுதந்திர பலஸ்தீனதின் ஒரு பகுதியாகவும் இருப்பதை பார்க்க விரும்புகிறோம். கிழக்கு ஜெருசலேம் நகரை தலைநகராக கொண்டு 1967ல் வகுக்கப்பட்ட எல்லைகளே அங்கு இருக்க வேண்டும். பலஸ்தீனர்களின் வாழ்வை இருள செய்யும் எந்த முடிவையும் நாங்கள் ஆதரிக்க மாட்டோம்.

இது குறித்த பேச்சு வார்த்தைகளில் துருக்கி ஈடுபட்டாலும், நேதன்யாகுவை ஆதரிக்க போவதில்லை.

இஸ்ரேல் நடத்திய போர் குற்றங்களுக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் இஸ்ரேலை பொறுப்பாக்குவோம்.


இஸ்ரேலை ஆதரித்ததன் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் எங்கள் நம்பிக்கையை இழந்து விட்டது என தெரிவித்துள்ளார்.
பலஸ்தீனில் 1967 இல் வகுக்கப்பட்ட எல்லைகளே இருக்க வேண்டும் ; துருக்கி ஜனாதிபதி எர்டோகன் வலியுறுத்தினார் பலஸ்தீனில் 1967 இல் வகுக்கப்பட்ட எல்லைகளே இருக்க வேண்டும் ; துருக்கி ஜனாதிபதி எர்டோகன் வலியுறுத்தினார் Reviewed by Madawala News on November 05, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.