அவுஸ்திரேலிய அணியை போல் இந்திய அணி யாரையும் நம்பி இல்லை - அதனால் இந்திய அணி நிச்சயம் உலகக் கிண்ணத்தை வெல்லும் ; ரவி சாஸ்திரி2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் தற்போது இடம்பெற்று வருகின்றது.

இந்த தொடரின் இரு அரையிறுதி போட்டிகளும் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், நாளை இறுதிப் போட்டி இடம்பெறவுள்ளது.

இந்த போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதவுள்ளன.

இந்தநிலையில், இந்தியா உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரை நிச்சயம் வெல்லும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில், “ இந்திய அணியினர் சொந்த மண்ணில் இறுதிப்போட்டியில் விளையாடுகிறார்கள்.


மிகவும் அனுபவம் வாய்ந்த அணி என்பதால் ஆர்வத்தில் புதிதாக எதையும் செய்ய தேவையில்லை.


உலகக் கிண்ணத்தை வெல்லும் என்ற ரசிகர்களின் நம்பிக்கையுடன் இந்திய அணி விளையாடவுள்ளது. உலகக் கிண்ண இறுதிப் போட்டியை பொறுத்தவரை யார் சிறப்பாக அழுத்தங்களை கையாள்கிறார்களோ அவர்களே வெல்வார்கள்.


என்னைப் பொறுத்தவரை இந்திய அணி ஒரு வீரரையோ அல்லது இரண்டு வீரர்களையோ நம்பி இல்லை.


இந்திய அணியை பொறுத்தவரை ஒவ்வொரு போட்டியிலும் 8 முதல் 9 வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

அதுதான் இந்திய அணியின் சிறப்பு.

அவுஸ்திரேலிய அணியை போல் அல்லாமல் இந்திய அணி யாரையும் நம்பி இல்லை என்று பார்க்கப்படுகிறது.

அதனால் இந்திய அணி நிச்சயம் உலகக் கிண்ணத்தை வெல்லும்” என தெரிவித்தார்
அவுஸ்திரேலிய அணியை போல் இந்திய அணி யாரையும் நம்பி இல்லை - அதனால் இந்திய அணி நிச்சயம் உலகக் கிண்ணத்தை வெல்லும் ; ரவி சாஸ்திரி அவுஸ்திரேலிய அணியை போல் இந்திய அணி யாரையும் நம்பி இல்லை - அதனால் இந்திய அணி நிச்சயம் உலகக் கிண்ணத்தை வெல்லும் ; ரவி சாஸ்திரி Reviewed by Madawala News on November 19, 2023 Rating: 5

1 comment:

  1. இந்திய வேசி மவனுங்களே சொந்த மைதானத்தில் தில்லு முல்லு செய்து வெற்றிபெற வெட்கமில்லையா நாய்களே

    ReplyDelete

Powered by Blogger.