உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த அந்த முக்கியமான இறுதிப் போட்டி நேற்று நடந்தது.
இதில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய நிலையில் இந்தியா தோல்வியை தழுவியது.
ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் மற்றும் மார்னஷ் லபுஷேன் ஆகியோரது அசைக்க முடியாத பார்ட்னர்ஷிப்பால் எளிதில் வெற்றி பெற்று 6ஆவது முறையாக டிராபியை கைப்பற்றியது.
இதன் மூலமாக இந்திய அணி சொந்த மண்ணில் ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை டிராபியை இழந்துள்ளது.
இந்த நிலையில் தான் உலகக் கோப்பையில் இந்திய அணியின் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாத இளைஞர் மன வேதனையில் இருந்த நிலையில் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
திருப்பதி அருகிலுள்ள துர்க்க சமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி குமார்.
இவர், தனது வீட்டில் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தார்.
எல்லோரும் போன்று டிராபி நமக்குத் தான் என்று ஜோதி குமாரும் நம்பிக்கை கொண்டிருந்தார். ஆனால், போட்டியில் மாற்றம் ஏற்பட ஏற்பட ஜோதி குமார் மன வேதனை அடைந்துள்ளார். அப்போது திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரை திருப்பதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாமல் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் மட்டுமின்றி, மைதானத்தில் கிரிக்கெட் போட்டியை நேரில் பார்த்த 1,30,000 ரசிகர்களின் இதயங்களும் நொறுங்கிவிட்டது. இந்தியாவின் தோல்வியை நேரில் காண முடியாத ரசிகர்கள் பாதியிலேயே நடையை கட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி ; Asia Net news
உலகக் கோப்பையில் இந்திய அணியின் தோல்வியை தாங்க முடியாத இளைஞர் உயிரிழப்பு.
Reviewed by Madawala News
on
November 20, 2023
Rating:

No comments: