வீடு தீப்பிடித்து எரிந்ததில் உள்ளே இருந்த நபர் உயிரிழப்பு.

வீடு தீப்பிடித்து எரிந்ததில் உள்ளே இருந்த நபர் உயிரிழப்பு.


இரத்தினபுரி - மல்வல வீதி பகுதியில் உள்ள வீடு ஒன்று தீப்பற்றி எரிவதாக இரத்தினபுரி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் உடனடியாக செயற்பட்ட இரத்தினபுரி தீயணைப்பு பிரிவினர் தீயை அணைத்துள்ளனர்.

இந்த தீ விபத்தில் வீட்டின் இரண்டு அறைகள் முற்றாக எரிந்ததுடன், அங்கு தங்கியிருந்த ஒருவர் தீயில் சிக்கி உடல் கருகி உயிரிழந்துள்ளார்.


உயிரிழந்தவர் 54 வயதுடைய மனைவி மற்றும் பிள்ளைகளை பிரிந்து தனியாக இந்த வீட்டில் வசித்து வந்தவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


எவ்வாறாயினும், தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது
வீடு தீப்பிடித்து எரிந்ததில் உள்ளே இருந்த நபர் உயிரிழப்பு. வீடு தீப்பிடித்து எரிந்ததில் உள்ளே இருந்த நபர் உயிரிழப்பு. Reviewed by Madawala News on November 03, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.