முச்சக்கரவண்டி - தார் ஏற்றிச் சென்ற வாகனத்துடன் மோதியதில் இளம்பெண் பலி - மூன்று பேர் காயம். தாய், தந்தை மற்றும் இரண்டு மகள்கள் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் மகள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


கலேவெல நகரில் நேற்று (23) பிற்பகல் தார் ஏற்றிச் சென்ற வாகனத்துடன் முச்சக்கரவண்டி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


விபத்தில் காயமடைந்த தாய், தந்தை மற்றும் ஏனைய மகள் ஆகியோர் சிகிச்சைக்காக தம்புள்ளை மற்றும் கலேவெல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


தெஹியத்தகண்டிய சிறிபுர பிரதேசத்தில் இருந்து குருநாகல் பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்த போதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.


 சிறிபுர பகுதியைச் சேர்ந்த எஸ். எச். லோச்சனா காவ்யாஞ்சலி என்ற 19 வயது இளம்பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இன்று (24) இவரது 20வது பிறந்தநாள் என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.


முச்சக்கரவண்டி குருநாகல் நோக்கி சென்று கொண்டிருந்த போது, ​​கலேவெல நகரின் பிரதான வீதிக்கு அருகில் கெப் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.


இதனை முந்திச் செல்ல முற்பட்ட வேளையில் பின்னால் வந்த தார் ஏற்றிச் சென்ற வாகனம் முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.


விபத்தின் பின்னர் முச்சக்கரவண்டிக்குள் இருந்த யுவதி தூக்கி வீசப்பட்டு தார் ஏற்றிச் சென்ற வானத்தின் சில்லில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 


விபத்து தொடர்பில் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த கெப் வண்டியின் சாரதி மற்றும் தார் ஏற்றிச் சென்ற வாகனத்தின் சாரதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முச்சக்கரவண்டி - தார் ஏற்றிச் சென்ற வாகனத்துடன் மோதியதில் இளம்பெண் பலி - மூன்று பேர் காயம்.  முச்சக்கரவண்டி - தார் ஏற்றிச் சென்ற வாகனத்துடன் மோதியதில் இளம்பெண் பலி - மூன்று பேர் காயம். Reviewed by Madawala News on November 24, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.