எனக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி வழங்கினால் சவாலை ஏற்க தயார் - அதே நேரத்தில் கல்வி அமைச்சையும் வழங்க வேண்டும் தனக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி வழங்கினால் சவாலை ஏற்க தயார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


சவாலை நான்  ஏற்றுக்கொள்வேன் என்று கூறும் உறுப்பினர், விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியில் இருந்து திரு.ரொஷான் ரணசிங்கவை நீக்குவது பொருத்தமானது என்பது தம்முடைய கருத்தல்ல எனவும் தெரிவித்தார்.


மேலும், விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி கொடுத்தாலும், அதே நேரத்தில் கல்வி அமைச்சையும் வழங்க வேண்டும் என்றும், விளையாட்டு என்பது  கல்வியுடன் இணைந்த  இரண்டு பாடங்களையும் ஒன்றாக வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.


விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி கிடைக்குமா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எனக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி வழங்கினால் சவாலை ஏற்க தயார் - அதே நேரத்தில் கல்வி அமைச்சையும் வழங்க வேண்டும் எனக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி வழங்கினால் சவாலை ஏற்க தயார் - அதே நேரத்தில் கல்வி அமைச்சையும் வழங்க வேண்டும்  Reviewed by Madawala News on November 21, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.