நாட்டை வங்குரோத்தாக்கியவர்களிடம் நஷ்ட ஈடு பெற நீதிமன்றத்திற்கு செல்லுங்கள்.சட்ட ஆதரவை நாம் வழங்குகிறோம்
*நாட்டு மக்கள் நிம்மதியிழந்து இருக்கும் வேளையில் நாட்டை வங்குரோத்தடையச் செய்த ராஜபக்சக்களுடன் சேர்ந்து தற்போதைய ஜனாதிபதி கேக் வெட்டி கொண்டாடுகிறார்*.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
நாட்டு மக்கள் பட்டினியால் வாடும் நிலையில்,நாட்டின் தற்போதைய தலைவரும் முன்னாள் அரச தலைவரும் பெரிய கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர் என்றும்,நாட்டு மக்களின் வாழ்க்கையை வெட்டித் தீர்த்த தலைவர்கள், தற்போதைய தலைவரின் உதவியால் சுகமான வாழ்க்கை வாழ்கிறார்கள் என்றும்,இது 2019 இல் எடுக்கப்பட்ட தவறான தீர்மானங்களின் விளைவு என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அரசியல் நண்பர்கள் ஒன்று கூடி தங்கள் குடும்பங்களின் குறைகளை நிவர்த்தி செய்து சுகபோக வாழ்க்கை வாழ்ந்தாலும்,நாட்டில் 220 இலட்சம் பேர் ஒரு நாளைக்கு 3 வேளை கூட சாப்பிட முடியாத நிலையில் உள்ளனர் என்றும்,
நாட்டு மக்கள் படும் துன்பங்கள் குறித்து இந்த
ஆட்சியாளர்களுக்கு அக்கறை இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பதுவத்துகொடை ஸ்ரீ சுனந்தாராம விகாரையில் இன்று(18) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
*நாட்டை வங்குரோத்தாக்கியவர்களிடம் நஷ்ட ஈடு பெற நீதிமன்றத்திற்கு செல்லுங்கள்.சட்ட ஆதரவை நாம் வழங்குகிறோம்*.
இந்நாட்டை வங்குரோத்தாக்கிய பொருளாதாரக் கொலையாளிகள் உயர் நீதிமன்றத்தின் முன் அம்பலமானார்கள் என்றும், நாட்டை வங்குரோத்தாக்கிய தரப்பினருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் புத்திஜீவுகள் பேரவையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் திறந்த பல்கலைக்கழகத்தின் மூன்று பேராசிரியர்கள் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் பரிசீலித்து மனுதாரர்களின் அடிப்படை உரிமைகள் கடந்த அரசாங்கத்தின் ஆட்சியாளர்களால் மீறப்பட்டுள்ளன என்று தீர்ப்பளித்துள்ளதாகவும்,இந்த தீர்மானத்தின் மூலம் நாட்டில் உள்ள 220 இலட்சம் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்தச் சட்ட நடைமுறையால், நாட்டின் 220 இலட்சம் மக்கள், நாடு வங்குரோத்தானதால் ஏற்பட்ட இழப்பு மற்றும் சேதங்களுக்கு இழப்பீடு கோரி சட்டத்தின் முன் செல்ல வழி திறக்கப்பட்டுள்ளதாகவும் ,இதற்குத் தேவையான சட்ட ஆதரவை வழங்கும் வேலைத்திட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும் முன்னெடுக்கும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இந்த மனு மூலம் இழப்பீடு கிடைக்காவிட்டாலும்,நாட்டிலுள்ள 220 இலட்சம் பேருக்கு இழப்பீடு கிடைக்க ஐக்கிய மக்கள் சக்திக்கு உறுதுணையாக இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
No comments: