திஹாரிய பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்திய நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் கொலை.திஹாரிய பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்திய நிலையம் ஒன்றில் பணியாற்றிய பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் இன்று அதிகாலை கொலை செய்யப்பட்டுள்ளார்.


மருத்துவ மனையின் உரிமையாளரின் உறவினர் ஒருவரே பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்த நிலையில்,  படுகொலை செய்யப்பட்டுள்ளார்.


இவர் திருமணமாகாத 59 வயதுடைய நபர் வத்தளை பிரதேசத்தை சேர்ந்தவர்.


அத்துடன் அந்த வைத்திய நிலையத்தின் உரிமையாளர் வைத்தியர், அவரது கணவரும் வைத்தியர் மற்றும் இருவரும் அங்கு பணிபுரிந்து வந்துள்ளனர்.


கொலையை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர்களே பணத்தையும் அங்கிருந்து  எடுத்துச் சென்றதாக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிட்டம்புவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


இதேவேளை, நேற்று இரவு திஹாரிய பிரதேசத்தில் இரண்டு கட்டிட பொருட்கள் விற்பனை நிலையங்கள் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தக் குழுவே இந்தக் கொலையையும், திருட்டுச் சம்பவங்களையும் செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.


சம்பவம் தொடர்பில் நிட்டம்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

திஹாரிய பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்திய நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் கொலை. திஹாரிய பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்திய நிலைய  பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் கொலை. Reviewed by Madawala News on November 27, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.