உலக கிண்ணம் : இந்திய அணி அபார வெற்றி - தென்னாபிரிக்கா படு தோல்விஉலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (05) இந்திய மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதின.குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி துடுப்பெடுப்பைத் தெரிவு செய்தது.இதன்படி ,முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 326 ஓட்டங்களை பெற்றது.துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் அணியின் அதிகபட்சமாக 101 ஓட்டங்களை விராட் கோலி ஆடபெற்றதுடன் ஷ்ரேயாஸ் ஐயர் 77 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.இதன்படி, தென்னாப்பிரிக்க அணிக்கு 327 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், 327 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 27 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 83 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.


அணிசார்பில் அதிகபடியாக மெர்கோ ஜொன்சன் 14 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.துடுப்பாட்டத்தில் சோபிக்க தவறிய தென்னாபிரிக்க அணியின் ஏனைய வீரர்கள் 14க்கும் குறைந்த ஓட்டங்களையே பெற்றனர்.பந்துவீச்சில், ரவீந்திர ஜடேஜா 33 ஓட்டங்களுக்கு 05 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
உலக கிண்ணம் : இந்திய அணி அபார வெற்றி - தென்னாபிரிக்கா படு தோல்வி உலக கிண்ணம் : இந்திய அணி அபார வெற்றி - தென்னாபிரிக்கா படு தோல்வி Reviewed by Madawala News on November 05, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.