தன்னிடம் பாலியல் லஞ்சம் கோரிய அதிகாரியை சூட்சுமமாக சிக்க வைத்த பெண் #கல்முனை பொலிஸ் பிரிவில் சம்பவம் கனகராசா சரவணன் 

கல்முனையில் பெண் ஒருவரிடம் பாலியல் இலஞ்சம்  கோரிய 59 வயதுடைய  பொலிஸ் சப் இன்பெக்டர் ஒருவர் கொழும்பில் இருந்து வந்த  இலஞ்ச ஓழிப்பு ஆணைக்குழுவால் நேற்று புதன்கிழமை (22) கைது செய்யப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.


கல்முனை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பெண் ஒருவர் ஏற்கனவே குற்றச் செயல் ஒன்றில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்து மாதத்தில் ஒருநாள் நீதிமன்றம் சென்று கையொழுத்து இட்டுவரும் குறித்த பெண்ணை அங்கு கடமையாற்றி வரும் கல்முனை பொலிஸ் தலைமையகத்தைச் சேர்ந்த 59 வயதுடைய பொலிஸ் சப் இன்பெக்கடர் பெண்னை அனுகி பாலியல் இலஞ்சம் கோரியுள்ளர்


இதனையடுத்து குறித்த பெண் கொழும்பிலுள்ள  இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிடம் தெரிவித்ததையடுத்து அவர்களின் வழிகாட்டலில், கல்முனை கடற்கரை பகுதியிலுள்ள உல்லாச விடுதி ஒன்றில் கொழும்பில் இருந்து வந்த இலஞ்ச உழல் பிரிவினர் மாறுவேடத்தில் சம்பவதினமான நேற்று காலை 9.30 மணிக்கு கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.


இதன் போது குறித்த பெண் பலியல் இலஞ்சம் கோரிய பொலிஸ் அதிகாரியை குறித்த விடுதிக்கு வருமாறு அழைப்பையடுத்து அங்கு சென்ற பொலிஸ் அதிகாரி விடுதி அறைக்கு சென்ற நிலையில் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த  இலஞ்ச ஒழிப்பு பிரிவினர் பொலிஸ் அதிகாரியை மடக்கிபிடித்து கைது செய்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது


இதில் கைது செய்யப்பட்டவரை விசாரணையின் பின்னர் அம்பாறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது அவரை 28 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதையடுத்து குறித்த பொலிஸ் அதிகாரியை கொழும்பிற்கு இலஞ்ச ஒழிப்பு பிரிவினர் அழைத்துச் சென்றுள்ளனர்.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இலஞ்ச ஒழிப்பு குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். 

தன்னிடம் பாலியல் லஞ்சம் கோரிய அதிகாரியை சூட்சுமமாக சிக்க வைத்த பெண் #கல்முனை பொலிஸ் பிரிவில் சம்பவம் தன்னிடம்  பாலியல் லஞ்சம் கோரிய அதிகாரியை சூட்சுமமாக சிக்க வைத்த பெண் #கல்முனை பொலிஸ் பிரிவில் சம்பவம் Reviewed by Madawala News on November 23, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.