ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட 9 பேர் பொலிஸாரால் கைது.ஹக்மன தெனகம பிரதேசத்தில் ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட 9 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஹக்மன பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி, இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதுடன், சந்தேகநபர்கள் வசம் இருந்த ஹெரோயின் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தெனகம, ஹக்மன, கதிர்காமம் மற்றும் திஸ்ஸ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 18 மற்றும் 38 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

இதன்படி, ஹக்மன, தெனகம மேற்கு பிரதேசத்தில் உள்ள பொலிஸ் கான்ஸ்டபிளின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, ​​அங்கு விற்பனைக்கு தயார் செய்யப்பட்ட ஹெரோயின் பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர் நாளை தெஹியந்தர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹக்மன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட 9 பேர் பொலிஸாரால் கைது. ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட 9 பேர் பொலிஸாரால் கைது. Reviewed by Madawala News on November 03, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.