தெலுங்கானாவில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்டு வரும் 4 சதவிகித இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் ; அமித்ஷா தேர்தல் பிரச்சாரம்



தெலுங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்டு வரும் 4 சதவிகித இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.

தெலுங்கானாவில் சட்டசபை தேர்தல் வரும் நவம்பர் 30 ஆம் தேதி ஒரே கட்டமாக நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால், தெலுங்கானாவில் தேர்தல் களம் உச்சக்கட்ட அனல் பறக்க தொடங்கி விட்டது.

தெலுங்கானாவில் தற்போது சந்திரசேகர் ராவ் தலைமையிலான பிஆர்எஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. தெலுங்கானா மாநிலம் உருவானது முதலே அங்கே பிஆர்எஸ் கட்சியே ஆட்சியில் இருந்து வருகிறது.

கடந்த தேர்தலில் கூட பிஆர்எஸ் மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்திருந்தது.


தேர்தல் வரும் நவம்பர் 29 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா, இன்று தெலுங்கானாவில் உள்ள ஜக்டியல் நகரில் தேர்தல் பிரசாரம் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.


அப்போது, அமித்ஷா பேசியதாவது:- ஓவைசிக்கு பயந்து ஐதராபாத் மீட்பு நாளை கொண்டாட சந்திரசேகர் ராவ் அச்சப்படுகிறார்.


ஆனால், நாங்கள் ஓவைசிக்கு அச்சப்படவில்லை.

நாங்கள் ஐதராபாத் மீட்பு நாளை மாநில நாளாக கொண்டாடுகிறோம்.


ஓவைசி திருப்திப்படுத்தும் அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.


கேசிஆர் கட்சியின் சின்னம் கார் ஆகும். ஆனால் அவர்களிடம் கட்சியின் ஸ்டீரிங் (கட்டுப்பாடு) இல்லை.


பாஜக ஆட்சி அமைத்தால் முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்டுள்ள 4 சதவிகித இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு அதை எஸ்.சி / எஸ்.டி மற்றும் ஒபிசி பிரிவினருக்கு வழங்குவோம" என்றார். பாஜக தனது தேர்தல் அறிக்கையிலும் இதை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது

தெலுங்கானாவில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்டு வரும் 4 சதவிகித இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் ; அமித்ஷா தேர்தல் பிரச்சாரம் தெலுங்கானாவில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்டு வரும் 4 சதவிகித இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் ; அமித்ஷா தேர்தல் பிரச்சாரம் Reviewed by Madawala News on November 21, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.