தனிமையில் இருப்பது, 15 சிகரெட் புகைப்பதற்கு சமம் என அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட து WHO



 தனிமையில் இருப்பதால் ஏற்படும் பாதிப்பை, ஒரு நாளில் 15 சிகரெட்டுகள் புகைப்பதால் ஏற்படும் பாதிப்புடன்  ஒப்பிட்டு  உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

https://www.theguardian.com/global-development/202

தற்போது தனிமையில் இருப்பது என்பது ஒரு தீவிரமான பிரச்சினையாக மாறி வருகிறது. மன நலன் மற்றும் உடல் நலன் ஆகிய இரண்டிற்கும் நீண்டகால விளைவுகளை தனிமை ஏற்படுத்துகிறது.


மனச்சோர்வு, பதட்டம் மற்றும் தற்கொலை போன்ற மனநலப் பிரச்சனைகள் தனிமையால் விளைகின்றன.


அதோடு உடல் நலம் சார்ந்தவற்றில் இதயநோய், பக்கவாதம், டிமென்ஷியா மற்றும் அகால மரணம் போன்ற ஆபத்துகள் காத்திருக்கின்றன.


இந்நிலையில் உடல் மற்றும் மன நலன் சார்ந்த பிரச்சினைகளுக்கு அப்பால், தனிமையில் இருப்பது சமூகத்திலிருந்து துண்டித்துக்கொள்ளவும், உறவுகளிடமிருந்து விலகுவதற்கும் காரணமாகி விடுகிறது.


இதன் காரணமாக ​​உலக சுகாதார நிறுவனம், தனிமையை ஒரு தீவிர உலகளாவிய சுகாதார அச்சுறுத்தலாக அங்கீகரித்துள்ளது.


அதோடு தனிமை மற்றும் அது சார்ந்த பிரச்சினைகளை தீர்க்க, தேசம் தழுவிய உத்திகளை உருவாக்கவும், செயல்படுத்தவும் தனது உறுப்பு நாடுகளுக்கு அறிவுறுத்தி வருகிறது.


உடல் உழைப்பின்மை, மிகை பருமன் ஆகியவை இந்த தனிமையில் இருப்பவர்களுக்கு கூடுதல் பாதிப்பாக விளைகின்றன.


இவற்றுக்கு அப்பால் சமூக தொடர்பு இல்லாததால் தனியான பாதிப்புகளுக்கும் இவர்கள் ஆளாகிறார்கள். அதுமட்டுமல்லாது தனிமைக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தை எதிர்கொள்ள, சிறப்பு ஆணையம் ஒன்றினை தொடங்கவும் உலக சுகாதார நிறுவனம் முடிவெடுத்துள்ளது.


’தனிமையின் தொற்றுநோயைச் சமாளிப்பதற்கான முதல் உலகளாவிய முயற்சி’ என்று உலக சுகாதார நிறுவனம் இதனை வர்ணிக்கிறது.


மேலும், தனிமையில் இருக்கும் சக மனிதர்களை மீட்க உதவுமாறு, உலக மக்கள் அனைவருக்கும் அழைப்பினையும் உலக சுகாதார நிறுவனம் விடுத்துள்ளது.

தனிமையில் இருப்பது, 15 சிகரெட் புகைப்பதற்கு சமம் என அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட து WHO தனிமையில் இருப்பது, 15 சிகரெட் புகைப்பதற்கு சமம் என  அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட து WHO Reviewed by Madawala News on November 21, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.