அர்ஜுன தலைமையிலான இலங்கை கிரிக்கட் இடைக்கால குழுவின் செயற்பாடுகளை 14 நாட்களுக்கு இடைநிறுத்தி தடை உத்தரவு பிறப்பித்தது நீதி மன்றம்.அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை கிரிக்கட் இடைக்கால குழுவின் செயற்பாடுகளை 14 நாட்களுக்கு இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.


முன்னாள் கிரிக்கெட் வீரர் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட் (SLC)க்கான இடைக்கால குழுவை நியமிப்பது தொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்ட வர்த்தமானிக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.


வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டதன் பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை பிறப்பித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், விளையாட்டுத்துறை அமைச்சரால் நியமிக்கப்பட்ட SLC இடைக்கால குழுவின் பணிகளை 14 நாட்களுக்கு இடைநிறுத்தியுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் இலங்கை கிரிக்கெட் சபைக்கான இடைக்கால குழு நியமனம் தொடர்பான வர்த்தமானி நேற்று வெளியிடப்பட்டது.

இலங்கை கிரிக்கெட்டுக்கு இடைக்கால குழுவை நியமிப்பதற்கான விளையாட்டுத்துறை அமைச்சரின் முடிவு குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிந்திருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விடயம் ஆராயப்பட்டது.

இந்த சந்திப்பின் போது, ​​ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை SLC இன் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் விளையாட்டு அமைச்சரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் குறித்து ஆராய்வதற்கு 4 பேர் கொண்ட அமைச்சர்கள் குழுவை நியமித்தது.
அர்ஜுன தலைமையிலான இலங்கை கிரிக்கட் இடைக்கால குழுவின் செயற்பாடுகளை 14 நாட்களுக்கு இடைநிறுத்தி தடை உத்தரவு பிறப்பித்தது நீதி மன்றம். அர்ஜுன தலைமையிலான இலங்கை கிரிக்கட் இடைக்கால குழுவின் செயற்பாடுகளை 14 நாட்களுக்கு இடைநிறுத்தி தடை உத்தரவு பிறப்பித்தது நீதி மன்றம். Reviewed by Madawala News on November 07, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.