இறுதி போட்டியில் இந்தியா உலக கிண்ணத்தை வென்றால் பாவனையாளர்களுக்கு 100 கோடி ரூபாயை வழங்குவதாக அறிவித்த ஜோதிட நிறுவனம்.உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி அவுஸ்திரேலிய அணிக்கும், இந்தியாவிற்கும் இடையே குஜராத் மாநில அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.


இந்நிலையில், இந்தியாவின் புகழ் பெற்ற இணையவழி ஜோதிட வலைதளமான "அஸ்ட்ரோடாக்" (Astrotalk) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி புனீத் குப்தா (Puneet Gupta), இந்தியர்களையும், இந்திய அணியினரையும் உற்சாகப்படுத்தும் ஒரு செய்தியை தனது அதிகாரபூர்வ சமூக வலைதள கணக்கில் வெளியிட்டுள்ளார்.


2011ல் இந்தியா உலக கிண்ணத்தை வென்ற போது தனது வாழ்வில் நடந்த சம்பவங்களை நினைவுகூர்ந்துள்ள புனீத், இந்த இறுதி போட்டியில் இந்தியா உலக கிண்ணத்தை வென்றால், அஸ்ட்ரோடாக் வலைதள பயனர்கள் அனைவருக்கும் 100 (இந்திய ரூபா) கோடி தொகையை சமமாக பகிர்ந்து வழங்க போவதாகவும், பகிர்மான தொகை பயனர்களின் "எப் வோல்ட்" (app wallet) கணக்கில் சேர்க்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.


இதன் மூலம் போட்டி முடிவதற்குள் பலர் இந்த வலைதளத்தில் பயனர்களாக பதிவு செய்யக்கூடும் என்பதால் இதனை சந்தை வியாபார யுக்தி என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஜோதிட இணையதளமான அஸ்ட்ரோடாக், இன்றைய போட்டியில் யார் வெல்ல போவது என கணித்து தெரிவிக்க வேண்டும் என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இறுதி போட்டியில் இந்தியா உலக கிண்ணத்தை வென்றால் பாவனையாளர்களுக்கு 100 கோடி ரூபாயை வழங்குவதாக அறிவித்த ஜோதிட நிறுவனம். இறுதி போட்டியில் இந்தியா உலக கிண்ணத்தை வென்றால் பாவனையாளர்களுக்கு 100 கோடி ரூபாயை வழங்குவதாக அறிவித்த ஜோதிட நிறுவனம். Reviewed by Madawala News on November 19, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.