பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - ஒருவர் பலி, பலர் காயம்.



நாரம்மல, தம்பலஸ்ஸ பிரதேசத்தில் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது.


இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


அலவ்வயில் இருந்து நாரம்மலை நோக்கி பயணித்த பஸ் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.


இதன்போது காயமடைந்த 7 பேர் குருநாகல் வைத்தியசாலையிலும் 11 பேர் நாரம்மல வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


விபத்தில் 51 வயதான நபரே உயிரிழந்ததுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - ஒருவர் பலி, பலர் காயம். பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - ஒருவர் பலி, பலர் காயம். Reviewed by Madawala News on October 19, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.