மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் எரிபொருள் நிரப்பு நிலையங்களை நடாத்துவதில் சிக்கல்... தினசரி விற்பனையும் குறைந்து வருவதாக தெரிவிப்பு. சமீபத்தில் மின் கட்டணம் 18 சதவீதத்தினால் உயர்த்தப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களை இயக்குவதில் சிக்கல் ஏற்படும் என பெற்றோலிய விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


தற்போதைய பொருளாதார நிலைமையினால் எரிபொருள் விற்பனை ஏற்கனவே பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் துணைச் செயலாளர் கபில நாவுதுன்ன தெரிவித்துள்ளார்.


இந்தப் பிரச்சினை நாட்டில் உள்ள அனைத்து தொழிற்சாலைகள் மற்றும் எரிபொருள் நிரப்பும் நிலையங்களையும் பாதிக்கும். செலவுகள் அதிகரிப்பதுடன் தினசரி விற்பனை குறைந்து வருகிறது எளன அவர் தெரிவித்தார்.


இதேவேளை, எரிபொருள் விலையை நாளாந்தம் திருத்தியமைக்கும் அரசாங்கத்தின் தீர்மானம் திருப்திகரமானது எனவும், இது மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் எனவும் நாவுதுன்ன தெரிவித்துள்ளார்.

மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் எரிபொருள் நிரப்பு நிலையங்களை நடாத்துவதில் சிக்கல்... தினசரி விற்பனையும் குறைந்து வருவதாக தெரிவிப்பு. மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் எரிபொருள் நிரப்பு நிலையங்களை நடாத்துவதில் சிக்கல்...  தினசரி விற்பனையும்  குறைந்து வருவதாக தெரிவிப்பு. Reviewed by Madawala News on October 24, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.