தீவிரமாக தாக்குதல்களை அதிகரித்த ரஷ்யா... 155 உக்ரைன் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.சமீப காலமாக உக்ரைனின் பகுதிகளை கைப்பற்றும் முனைப்பில் ரஷ்யா தீவிரமாக களமிறங்கியுள்ளது.எனவே, தாக்குதலை தீவிரப்படுத்தும்படி இராணுவத்தினருக்கு ரஷ்ய ஜனாதிபதி உத்தரவிட்டார். இதனால் உக்ரைனுக்கு சொந்தமான குபியன்ஸ்க், லைமன் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றது.


அதன்படி , உக்ரைன் ஜனாதிபதியின் சொந்த ஊரான கிரிவ்யிரி மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.அதேபோல் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள இராணுவ முகாம் மீது டிரோன் தாக்குதல் மற்றும் பீரங்கிகளை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இந்த தாக்குதலில் உக்ரைனை சேர்ந்த 155 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ரஷ்ய இராணுவ ஊடகப் பேச்சாளர் வாடிம் அஸ்டாபியேவ் தெரிவித்துள்ளார்.
( கடந்த ஒரு சில நாட்களில் மொத்த எண்ணிக்கை 260 என மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளது.


எனினும் உக்ரைன் தரப்பில் இது குறித்து எவ்வித தகவலும் அளிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிரமாக தாக்குதல்களை அதிகரித்த ரஷ்யா... 155 உக்ரைன் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். தீவிரமாக தாக்குதல்களை அதிகரித்த ரஷ்யா... 155 உக்ரைன் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். Reviewed by Madawala News on October 22, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.