லேன்ட் ஒப் லேர்னின்ங் ஒன்லைன் இஸ்லாமிய கல்வி நிறுவனத்திற்கு புதிய மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.



*2023ம் கல்வி ஆண்டிற்காக புதிய *மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்*
*படுகின்றன.*

இலங்கையைத் தளமாக கொண்டியங்கும் லேன்ட் ஒப் லேர்னின்ங் ஒன்லைன் இஸ்லாமிய கல்வி நிறுவனமானது கடந்த 04 வருட காலமாக நன்கு பயிற்றுவிக்கப்பட்ட, திறமையான ஆசிரியர் குலாமின் கற்பித்தல் மற்றும் வழிகாட்டலில் சிறப்பாக இயங்கி வருகின்றது.

மேற்கு அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய பகுதிகளில் வசித்து வருகின்ற இலங்கையைப் பின்புலமாகக் கொண்ட சிறார்களுக்காகவும், வயது வந்தவர்களுக்காகவும் ஆங்கில மொழி மூலம் தனது பாடத்திட்டத்தைப்
பிரத்தியேகமாக வடிவமைத்து, நடாத்தி வந்த குறித்த கல்வி நிறுவனமானது தற்போது குறித்த பகுதிகளில் வசிக்கும் ஏனைய நாட்டு மாணவர்களையும் உள் வாங்கிக் கொள்ளும் நோக்கில் அரபு, உர்து, தமிழ் ஆகிய மொழிகளையும் உள்ளடக்கியதாக தனது கற்பித்தல் நடவடிக்கைகளை விரிவு படுத்தி இருக்கின்றது.

கோடை கால விடுமுறையின் பின்னர் (செப்டம்பர் மாதம்) புதிய மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்ற முறைமையை அடிப்படையாகக் கொண்டியங்கும் எமது கல்வி நிறுவனமானது 2023ம் வருட கல்வி ஆண்டிற்கான புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக தற்போது விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்கின்றது.

பகுதி நேரமாக இயங்கி வரும் எமது இஸ்லாமிய கல்வி நிறுவனத்தில் இருந்து பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் கற்றுத் தேர்ந்து வெளியேறி இருப்பதுடன் ஐக்கிய இராஜ்ஜியம் (UK), சவுதி அரேபியா, கட்டார் ஆகிய நாடுகளில் வசிக்கின்ற பல மாணவர்கள் எமது நிறுவனத்தில் இருந்து அல் குர்ஆனைப் பூர்த்தியாக மனனம் செய்த ஹாபிள்களாக வெளியேறியுள்ளனர். அல்ஹம்து லில்லாஹ்.

ஒவ்வொரு மாணவரும் பிரத்தியேகமான முறையில் கவணிக்கப்படல் வேண்டும் எனும் நோக்கில் அல் குர்ஆனுடன் தொடர்புபட்ட சகல மாணவர்களுக்கும் குழு வகுப்புக்களாக இன்றி தனித்தனியாகவே பாட வகுப்புக்கள் நடாத்தப்பட்டு வருகின்றன. உயர் தொழில்நுட்பங்களுடன் கூடிய தஜ்வீத் சட்டதிட்டங்கள் கற்பிக்கப்படுவதுடன் குறித்த நாடுகளில் அறவிடப்படுகின்ற மாதாந்த கட்டணங்களுடன் ஒப்பிடுகையில் எமது கல்வி நிறுவனத்தினால் மிகவும் நியாயமான மாதாந்தக் கட்டணமே அறவிடப்படுகின்றது.

இங்கிலாந்து, ஜப்பான், இலங்கை ஆகிய நாடுகளில் நீண்ட காலம் கற்பித்தல் துறையில் சிறந்த அனுபவங்களைக் கொண்டுள்ள
அஷ் ஷெய்க், அல் ஹாபிழ், அல் உஸ்தாத் ஷfபீக் zஸுபைர் அவர்களின் கீழ் இயங்கும் ஆசிரியர் குழாமில் இடம்பெறுகின்ற அனைவரும் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்களாவர்.

மேலதிக தகவல்களுக்கும், தொடர்புகளுக்கும்:
+447941042215
லேன்ட் ஒப் லேர்னின்ங் ஒன்லைன் இஸ்லாமிய கல்வி நிறுவனத்திற்கு புதிய மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. லேன்ட் ஒப் லேர்னின்ங் ஒன்லைன் இஸ்லாமிய கல்வி நிறுவனத்திற்கு புதிய மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. Reviewed by Madawala News on September 18, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.