பாறுக் ஷிஹான்
கரையோரப் பாதுகாப்பு தரப்பினர் கடலரிப்பபைத் தடுப்பதற்கு எனத் தெரவித்து பாரிய முண்டுக் கற்களை மீன் பிடி நடவடிக்கைகளுக்காகப் போக்குவரத்து செய்யும் பாதையில் போட்டுவிட்டு நாட்கள் பல கடந்தும் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கண்டித்து சாய்ந்தமருது பெண்கள் சந்தைக்கு அருகில் உள்ள பிரதான பாதையை தோணிகளைக் கொண்டு மறித்து மீனவர்கள் இன்று (18) காலை ஆர்ப்பாட்டத்தில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.
உரிய அதிகாரிகள் இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
சாய்ந்தமருது பொலிஸாரும் கரையோரப் பாதுகாப்பு தரப்பினரும் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வருகைதந்து மீனவர்களுடன் சமரசமாகப் பேசி கற்கள் போடும் வேலைகளை துரிதமாக செய்கின்றோம் என்று உறுதி தெரிவித்ததற்கு இணங்க மீனவர்களால் தோணிகளைக் கொண்டு மறிக்கப்பட்ட பாதையில் தள்ளி வைக்கப்பட்டிருந்த தோணிகள் அகற்றப்பட்டன.
No comments: