கஜேந்திரன் எம்.பியை பேரினவாதக் கும்பல் தாக்கிய சம்பவம் கவலை அளிக்கிறது. "சிறுபான்மை சமூகங்கள் மீதான அடக்குமுறைகள் ஓயவில்லை; கஜேந்திரன் எம்.பியை தாக்கியமை கவலையளிக்கிறது" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் கண்டனம்!

பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீதான தாக்குதலை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

அவரது கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

"சிறுபான்மைச் சமூகங்கள் இன்னும் அடக்குமுறைக்குள் இருப்பதையே இந்தத் தாக்குதல் வெளிப்படுத்துகிறது. சிறுபான்மைச் சமூகத்தைச் சார்ந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கே இந்த நிலை என்றால், சிறுபான்மை மக்களின் நிலை எப்படியிருக்கும்?

பேரினவாதக் கும்பலின் அட்டகாசங்களுக்கு சிறுபான்மை மக்கள் பலியாவது அல்லது அவமானப்படுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும். இவற்றைச் செய்யாமல் சமூக ஐக்கியம் எங்கே வரப்போகிறது?

பொலிஸாருக்கு முன்னால் இவ்வாறன அடாவடித்தனங்கள் இடம்பெறுவது சட்டவாட்சியை கேலிக்கூத்தாக்குகின்றது. சட்டத்தின் ஆட்சியை பேரினவாதக் கும்பல் கையிலெடுக்கும் நிலைமைகள் ஒழிக்கப்படாத வரை, சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பே கிடையாது. அரசியல் உரிமைகளை உணர்வு ரீதியாக மதிக்கவும் இடமில்லாத இந்த ஆட்சியில், நாம் எந்த நம்பிக்கையில் வாழப்போகிறோம்?" இவ்வாறு அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

கஜேந்திரன் எம்.பியை பேரினவாதக் கும்பல் தாக்கிய சம்பவம் கவலை அளிக்கிறது.  கஜேந்திரன் எம்.பியை பேரினவாதக் கும்பல் தாக்கிய சம்பவம் கவலை அளிக்கிறது. Reviewed by Madawala News on September 18, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.