இன்றைய இறுதிப் போட்டியை காண போலி டிக்கெட்டுகள் விற்பனை – பொலிஸார் எச்சரிக்கை.



கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் இன்று இடம்பெறவுள்ள இந்திய – இலங்கை அணிகளுக்கு இடையிலான இறுதி போட்டி குறித்து பொலிஸ் ஊடகப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.


இன்றைய இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுக்களில் போலி டிக்கெட்டுகள் விநியோகிக்கப்படுவதாகவும் அவற்றை வாங்க வேண்டாம் என்றும் பொதுமக்கள் எச்சரிக்கப்படுகிறார்கள்.



டிக்கெட்டுகளில் உள்ள QR குறியீடுகள் மைதான வாயில்களில் சரிபார்க்கப்படுமென பொலிஸார் தெரிவித்துள்ளார்.


அத்துடன் மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் அல்லது சிரமத்திற்கு உள்ளாக்கக்கூடிய கூர்மையான ஆயுதங்கள், கண்ணாடி போத்தல்கள், தலைக்கவசங்கள் போன்ற எந்தவொரு பொருட்களையும் தம்முடன் கொண்டு வர வேண்டாம் என்றும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இன்றைய இறுதிப் போட்டியை காண போலி டிக்கெட்டுகள் விற்பனை – பொலிஸார் எச்சரிக்கை. இன்றைய இறுதிப் போட்டியை காண போலி டிக்கெட்டுகள் விற்பனை – பொலிஸார் எச்சரிக்கை. Reviewed by Madawala News on September 17, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.