மாத்தறை, மெத்தவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் நிர்மாணிக்கப்பட்டிருந்த அறை ஒன்றின் மேற்கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் வெடிபொருட்கள் என்பன பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மாத்தறை, மெத்தவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் இருந்து இந்த வெடிபொருட்கள் மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலும் பாடசாலையின் குறித்த அறை பயன்படுத்தப்படாமல் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அங்கிருந்து டி56 தோட்டாக்கள் 20, மிமீ 3.2 தோட்டாக்கள் 24 , மி.மீ. 9 தோட்டாக்கள் 107 மற்றும் கல்கடஸ் வகை துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.
மேலும், தொடர்ந்து மேற்கொண்ட தேடுதலின் போது, TNT என சந்தேகிக்கப்படும் 194 கிராம் வெடிபொருட்களும் அங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மாத்தறை பிரதேச பாடசாலை அறையொன்றில் இருந்து பல வெடிபொருட்கள் மீட்பு.
Reviewed by Madawala News
on
September 18, 2023
Rating:

No comments: