பொலனறுவை- வெலிக்கந்தை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ஏறாவூர் பிரதான வீதியை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஹனீபா அவர்கள் இன்று அதிகாலை 3மணிக்கு கடமை முடிந்து தனது அறைக்கு உறங்கச் சென்றவர் காலை 6 மணிக்கு ஜனாசாவாக மீட்கப்பட்டுள்ளார்-
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்..
நீதிபதியின் உத்தரவுக்கு அமைய தற்போது அவரது அறையில் இருந்து ஜனாசா பிரேத பரிசோதனைக்காக பொலனறுவை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுகிறது -
கையில் ஒரு பெரிய காயம் காணப்படுவதாகவும் அறை முழுக்க இரத்தம் ஓடி காணப்படுவதுடன் அறையின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்துள்ளதாகவும் தகவல் -ஏதும் திட்டமிட்ட சதியா ?
இறைவன் அறிந்தவன் -
பொலிஸ் தடயவியல் பிரிவினர் துணையுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் ,
இடம்பெறும் பிரேத பரிசோதனையின் போதே மரணத்திற்கான சரியான காரணம் தெரிய வரலாம்-
அல்லாஹ் அந்த சகோதரரை பொருந்திக் கொள்வானாக- இழப்பால் வாடி நிற்கும் உறவுகளுக்கு உள அமைதியை வழங்கிடுவானாக !
பிந்திய தகவலின் படி இது ஒரு கொலையே என உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இன்று மாலை 6 மணியளவில் வெளியான Update
UPDATE -3
வெலிக்கந்தை பொலிஸ் நிலையத்தில் பணி புரிந்த ஏறாவூரை சேர்ந்த ஹனீபா எனும் பொலிஸ் உத்தியோகத்தர் தனது உத்தியோகபூர்வ அறையில் இரத்த வெள்ளத்தில் ஜனாசாவாக இன்று காலை மீட்கப்பட்ட சம்பவம் கொலையாக இருக்கலாம் எனும் கோணத்தில் ஸ்த்தளத்திற்கு சென்ற உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர் -
இருந்தாலும் பொலிசாரினதும் சட்ட வைத்திய அதிகாரியினதும் விசாரணை அறிக்கையை வைத்தே இந்த மர்ம மரணத்தின் உண்மை வெளிப்படும் என அங்கு சென்றுள்ள ஏறாவூரை சேர்ந்த திடீர் மரண விசாரணை அதிகாரி நஸீர் ஹாஜி தெரிவித்தார் -
ஜனாசா நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் பிரேத பரிசோதனைகளுக்காக பொலனறுவை வைத்தியசாலையில் தற்போது வைக்கப்பட்டுள்ளதுடன் - விடுமுறை தினமாக காணப்படுவதால் பெரும்பாலும் நாளை அல்லது திங்கட்கிழமையே பிரேத பரிசோதனைகள் இடம்பெற்று உறவினர்களிடம் ஜனாசா கையளிக்கப்படலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.
உயிரிழந்த பொலிஸ் அதிகாரியினது வலது கையின் முழங்கையை அண்டிய பகுதியில் பெரிய ஒரு காயம் உள்ளதுடன் , ஜனாசா தரையிலே காணப்படுகிறது-
அவர் தங்கி இருந்த அறை முழுக்க இரத்தம் தோய்ந்து காணப்படுவதுடன் படத்திலே உள்ளவாறு ஜன்னல் உடைக்கப்பட்டுள்ளதுடன் ஜன்னல் வெளிப்புற சுவரிலும் இரத்தக் கரை காணப்படுகிறது -
தடயவியல் பொலிஸ் பிரிவினரின் துணையுடன் பொலிஸார் துரித விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் -
மரணத்துக்கான காரணம் என்ன என்பது மேற்கொள்ளப்பட உள்ள பிரேத பரிசோதனை அறிக்கை முடிவுகளின் பிரகாரம் வெளிப்படுத்தப்படலாம்-
பொலிஸ் நிலைய வளாகத்துக்குள் இடம்பெற்றுள்ள பொலிஸ் உத்தியோகத்தரது மரணம் குறித்து நிச்சயம் பொலிசார் இவ்விடயத்தில் உள்ள மர்மத்தினை வெளிக்கொணர்வார்கள் என நம்புகிறோம்..
முஹம்மது அஸ்மி -ஏறாவூர்
30.09.2023
பொலிஸ் உத்தியோகத்தர் ஹனீபா, ஜனாசாவாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில்..
Reviewed by Madawala News
on
September 30, 2023
Rating:

No comments: