(எஸ்.அஷ்ரப்கான்)
அரசியல் உச்சத்தை எட்டும் பாதை
யில் முஸ்லிம் காங்கிரஸை வழிநடத்
துவோம்.
இதற்காக மறைந்த தலை
வர் மர்ஹூம் அஷ்ரப்பின் அந்திமகால
முயற்சிகளை நாம் முன்னெடுப்பதற்கான
ஆரம்ப நிகழ்வாக இன்றைய நினை
வேந்தலை எடுத்துக் கொள்வோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங் கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்
பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்
ஸ்தாபகத் தலைவர், மர்ஹூம் எம்.எச்.எம்.
அஷ்ரப்பின் 23 ஆவது வருட நினைவு தின தேசிய நினைவேந்தல் நிகழ்வு
நேற்று (16) சாய்ந்தமருது பௌஸி விளை
யாட்டு மைதானத்தில் இடம்பெற்ற போது
அங்கு உரையாற்றிய ஹக்கீம் மேற்கண்டவாறு கூறினார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில்
இந்தியா வாணியம்பாடி இஸ்லாமிய
கல்லூரியின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் கவிமாமணி பேராசிரி
யர் முனைவர் அப்துல் காதர் கலந்து
கொண்டு அஷ்ரப்பின் அரசியல்
முன்னெடுப்புகள், இலங்கை அரசியலில்
அஷ்ரப்பின் வகிபாகம், இலங்கை தேசிய
அரசியலில் அஷ்ரப்பின் சாதனைகள்,
முஸ்லிம் அரசியலில் அஷ்ரப் சாதித்
தவை, சர்வதேச தொடர்புகளை பேண
அஷ்ரப் கையாண்ட முறைகள் தொடர்பில்
சிறப்புரை நிகழ்த்தினர்.
மு.கா. தவிசாளரும், முன்னாள்
மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல்.
எம்.மஜிட் தலைமை
யில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின்
ஆத்ம ஈடேற்றத்திற்காக விசேட கத்தமுல்
குர்ஆன், மற்றும் விசேட துஆ பிரார்த்
தனை இடம்பெற்றது.
கல்முனை மாநகர முன்னாள் மேயர்
கலாநிதி சிராஸ் மீரா சாஹிப்பின் வரவேற்பு
ரையுடன் ஆரம்பமான நினைவேந்தல்
நிகழ்வில் ஹக்கீம் தொடர்ந்து உரையாற்
றுகையில்,
முஸ்லிம் காங்கிரஸ் எனும் பேரியக்கம்
நாட்டின் ஆட்சிக் கதிரைகள் பக்கம்
இருந்தாலும், எதிர்த் தரப்பில் இருந்தா
லும், முஸ்லிம் சமூகத்தின் ஆளும் கட்சி
முஸ்லிம் காங்கிரஸேதானாகும்.
மறைந்த தலைவர் அஷ்ரப் தமது
அந்திம காலத்தில் முன்னெடுத்து விட்டுச்
சென்ற விடயங்கள் பல உள்ளன.
முக்கியமாக அவர் அந்திம காலத்தில்
கட்சியோடு முரண்பட்டு இருந்தவர்கள்
மற்றும் மாற்றுக் கட்சிகளில் இணைந்து
இருந்தவர்களை வீடு வீடாகச் சென்று
சந்திப்புகளை நடத்தி, முஸ்லிம் காங்கி
ரஸூக்குள் உள்வாங்கும் முயற்சிகளைச்
செய்து வெற்றியும் கண்டார்.
அந்த வகையில் வெளியில் உள்ளவர்க
ளையும் நமது பாசறையில் இணைப்பதற்
கான முயற்சிகளை நாம் முன்னெடுக்க
வேண்டும். இதற்காக முஸ்லிம் காங்கி
ரஸின் கதவு இனி எப்போதும் திறந்தே
இருக்கும்.
நமது அரசியலைப் பொறுத்தவரை
அஷ்ரப்புக்கு முன்பும் பின்பும் என்றே
எழுதப்படும்.
முஸ்லிம் காங்கிரஸை மலினப்படுத்தி,
சிறுமைப்படுத்தி, சிதைத்து விடும் எத்த
கைய முயற்சிக்கும் இடமளிக்க முடியாது.
அனைவருக்கும் நியாயம் செய்யும்
தலைவராகவே கட்சியின் செயற்பாடு
களை நான் முன்னெடுத்து வருகிறேன்.
முஸ்லிம் காங்கிரஸைத் தொடர்ந்து
முஸ்லிம்கள் அனைவரதும் பாசறையாக
வும் அரவணைக்கும் அரசியல் கட்டமைப்
பாகவும் முன் கொண்டு செல்வோம்.-
என்றார்
முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர்
சிரேஷ்ட சட்டத்தரணி நிஸாம் காரியப்பர்,
பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்
பினருமான எச்.எம்.எம்.ஹரிஷ் ,பிரதிப்
பொருளாளர் ஏ.சி.யஹியாகான் ஆகி
யோர் உரையாற்றினர்.
இந்நிகழ்வில் உலமாக்கள், ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம்
ஜனாதிபதி சட்டத்தரணி எம்.நிஸாம் காரி
யப்பர், பாராளுமன்ற உறுப்பினர்க
ளான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ்,
எம்.எஸ் தௌபீக், முன்னாள் ஆளுநர்
கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்,
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்க
ளான எம்.ஐ.எம் மன்சூர், செய்யது அலி
சாஹீர் மௌலானா, {ஹனைஸ் பாருக்,
முன்னாள் மாகாண அமைச்சர்கள்,
மாகாண சபை உறுப்பினர்கள், பிர
திப் பொருளாளர் ஏ.சி.யஹியாகான்,
கல்முனை மாநகர சபை முன்னாள்
முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப்
கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள்,
முன்னாள் மாநகர சபை உறுப்பினர்கள்,
முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள்
கட்சிப்பிரமுகர்கள், சமூக செயற்பாட்டா-
ளர்கள் உள்ளிட்ட கட்சி
ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
அரசியல் உச்சத்தை எட்டும் பாதையில் முஸ்லிம் காங்கிரஸை வழிநடத்துவோம் - ஹக்கீம் சூளுரை
Reviewed by Madawala News
on
September 17, 2023
Rating:

No comments: