மொஹமட் பாரிஸ் வெட்டிக் கொல்லபட்ட சம்பவத்தில் கைதான முகம்மது ஹம்சா, ரியாஸ்தீன் மொஹமட், மொஹமட் பிர்தவ்ஸ் உள்ளிட்ட 8 பேருக்கு இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பு.



 கூரிய ஆயுதங்களால் வெட்டி நபர் ஒருவரைக் கொன்ற குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்ட எட்டு பிரதிவாதிகளுக்கு களுத்துறை மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன புதன்கிழமை (27) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.


2003 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி அல்லது அண்மித்த நாட்களில் களுத்துறை தெற்கில் உள்ள கலீல் பிளேஸில் வசிக்கும் சேயர் மொஹமட் மொஹமட் பாரிஸ் என்பவர் கூரிய ஆயுதங்களால் கொல்லப்பட்டமை தொடர்பில் எட்டு சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் உயர்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.


46 வயதான மொஹமட் ஜைன் முகம்மது ஹம்சா, 

49 வயதான அப்துல் கரீம் மொஹமட் ரயிஸ்தீன், 

59 வயதான மொஹமட் மவ்ஸ் மொஹமட், 

45 வயதான மொஹமட் ரியாஸ்தீன் மொஹமட், 

47 வயதான மொஹமட் ஜிப்ரி மொஹமட் ஜின்னா,  அனைவரும் களுத்துறை, 


மஹா ஹினடியங்கல பகுதியைச் சேர்ந்த 43 வயதான மொஹமட் ஜிப்ரி மொஹமட் பிர்தவ்ஸ், 

44 வயதான மொஹமட் சஹீர் மொஹமட் சியாம், 

45 வயதான மொஹமட் நிலாப்தீன் மொஹமட் அஜீல் ஆகியோருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


மொஹமட் பாரிஸ் வெட்டிக் கொல்லபட்ட சம்பவத்தில் கைதான முகம்மது ஹம்சா, ரியாஸ்தீன் மொஹமட், மொஹமட் பிர்தவ்ஸ் உள்ளிட்ட 8 பேருக்கு இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பு. மொஹமட் பாரிஸ் வெட்டிக் கொல்லபட்ட சம்பவத்தில் கைதான முகம்மது ஹம்சா, ரியாஸ்தீன் மொஹமட், மொஹமட் பிர்தவ்ஸ் உள்ளிட்ட 8 பேருக்கு இன்று  மரண தண்டனை விதித்து தீர்ப்பு. Reviewed by Madawala News on September 27, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.