பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த தந்தையும் மகளும் 16 அடி ஆழ நீர் குழியில் விழுந்த பதைபதைப்பான சம்பவம்.
பாடசாலைக்கு இன்று (19) காலை சென்று கொண்டிருந்த தந்தையும் மகளும் கொத்தட்டுவ IDH நீர் வழங்கல் சபைக்கு அருகாமையில் நீர் தேங்கியிருந்த சுமார் 16 அடி ஆழமுள்ள குழியில் விழுந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த தந்தையும் மகளும் குழியில் தவறி விழுந்ததாகவும், பின்னர், தந்தை மகளை குழியில் இருந்து வெளியே கொண்டு வந்துள்ளதை தொடர்ந்து பிரதேசவாசிகள் அவர்கள் இருவரையும் காப்பாற்றியுள்ளனர்.
இதேவேளை, குடிநீர் குழாய் உடைந்ததன் காரணமாக இவ்வாறு பாரிய குழி ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதியில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த தந்தையும் மகளும் 16 அடி ஆழ நீர் குழியில் விழுந்த பதைபதைப்பான சம்பவம்.
Reviewed by Madawala News
on
September 19, 2023
Rating:

No comments: