சில வாரங்களுக்கு முன் யானை தாக்கி யுவதி உயிரிழந்த சம்பவத்தில் திருப்பம் - காதலன் கைது செய்யபட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.சில வாரங்களுக்கு முன்  உட தியலும பிரதேசத்தில் காட்டு யானைத் தாக்குதலுக்கு உள்ளாகி யுவதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அவரின் காதலன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


சந்தேகநபர் இன்று (05) பண்டாவரளை நீதவான் நீதிமன்றில் முன்னலைப்படுத்திய வேளை, எதிர்வரும் 15 ஆம் திகதி வரை குறித்த நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


கடந்த மே மாதம் 11 ஆம் திகதி மாலை கொஸ்லாந்த, தியலும நீர்வீழ்ச்சியின் உடதியலும பகுதிக்கு பிரவேசத்த குறித்த இளம் ஜோடி இரவில் தங்க முற்பட்டுள்ளனர்.


இதன்போது இளம் யுவதி காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தார்.

 

சம்பத்தில் காயமடைந்த இளைஞர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

 

பின்னர் சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான காதலன் வழங்கிய வாக்குமூலம் முரண்பாடாக காணப்பட்டதால் பொலிஸாரால் அவர் கைது செய்யபடப்பட்டிருந்தார்.

 

சம்பவம் தொடர்பில் கொஸ்லாந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சில வாரங்களுக்கு முன் யானை தாக்கி யுவதி உயிரிழந்த சம்பவத்தில் திருப்பம் - காதலன் கைது செய்யபட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். சில வாரங்களுக்கு முன் யானை தாக்கி யுவதி உயிரிழந்த சம்பவத்தில் திருப்பம் - காதலன் கைது செய்யபட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். Reviewed by Madawala News on June 05, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.