இறங்கும் போது விமானத்தில் இருந்து தவறி விழுந்து பயணி உயிரிழப்பு. கட்டுநாயக்கவில் சம்பவம்



இலங்கை வழியாக கனடா செல்வதற்காக வந்த இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இறங்கும் போது விமானத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
கே.ஜோர்ஜ் (65) என்ற பயணியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பயணி உயிரிழந்துள்ளதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இறங்கும் போது விமானத்தில் இருந்து தவறி விழுந்து பயணி உயிரிழப்பு. கட்டுநாயக்கவில் சம்பவம் இறங்கும் போது விமானத்தில் இருந்து தவறி விழுந்து பயணி உயிரிழப்பு. கட்டுநாயக்கவில் சம்பவம் Reviewed by Madawala News on June 03, 2023 Rating: 5

1 comment:

  1. சர்வதேச பயணி ஒருவரின் ஏறும் போது இறங்கும் போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது விமான நிலைய அதிகாரிகளின் பொறுப்பாகும். அத்தகைய பொறுப்பிலிருந்து எந்த அதிகாரியும் விடுபட முடியாது. இந்த விபத்திலான மரணம் சரியாக விசாரணை செய்யப்பட்டு உரியவருக்குத் தண்டனை வழங்க வேண்டும். இல்லாவிட்டால் இலங்கை அதன் சர்வதேச பெயரில் அவப் பெயரையும் ஆபத்தான விமான நிலையம் என்ற அவப் பெயரையும் வாங்கிக் கட்ட வேண்டிவரும்.

    ReplyDelete

Powered by Blogger.