எல்லா தொற்று நோய்களும் சுற்றாடல் மாசு படுவதன் விளைவாலேயே ஏற்படுகிறது ; அமைச்சர் ஹாபிஸ் நசீர்



எல்லா தொற்று நோய்களும் சுற்றாடல் மாசு படுவதன் விளைவால் ஏற்படுவதாகும். டெங்கு பரவுவதைத் தடைசெய்வதற்காக சகல பிரஜைகளும் இவ்வாரத்தில் பங்களிப்புச் செய்ய வேண்டும் என சுற்றாடல் அமைச்சர் பொறியியளாலர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

உலக சுற்றாடல் தினத்துக்கு சமமாக சுற்றாடல் பாதுகாப்பு வாரத்தை ஆரம்பித்து வைத்து உரைநிகழ்த்துகையிலே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இவ்வைபவத்தில் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில் ஜாசிங்க உள்ளிட்ட அதிகாரிகளும் பாடசாலை மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் கடந்தவாரம் சுற்றாடலில் ஆதிக்கம் செலுத்தும் விடயங்கள் தொடர்பாக மக்களின் அவதானத்தை ஈர்க்கச் செய்யும் முகமாக மரநடு தினம், காற்று மாசடைவதற்கான காரணிகளை குறைக்கும் தினம், சுற்றுப்புர சூழலை சுத்தமாக்கும் தினம், உயிரியல் பன்முகத்தன்மையைப் பாதுகாக்கும் தினம், நீர் மற்றும் நீர்வளங்களைப் பாதுகாக்கும் தினம், நிலைபேறான காணி முகாமைப்படுத்தல் தினம் மற்றும் பிலாஸ்டிக் கழிவுப் பொருட்கள் முகாமைப்படுத்தல் தினம் முதலான தினங்களைப் பிறகடனப்படுத்தி அதற்கான பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை சுற்றாடல் அமைச்சு செயற்படுத்தியுள்ளது.

மேலும் எமது நாட்டில் பாரிய உயிராபத்தை ஏற்படுத்தக் கூடிய டெங்கு நோயை முற்றாக அழிக்க சுகாதாரத்துறையுடன் இணைந்து மக்களை விழிப்பூட்டும் நிகழ்ச்சிகளும் தொடர்ந்து மேற்கொள்ள அரசாங்கம் நடிவடிக்கை எடுத்து வருகிறது.

சர்வதேச சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை 1972ஆம் ஆண்டு முதல் உலகின் எல்லா நாடுகளிலும் சுற்றாடல் தொடர்பான பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை அமுல் நடத்தி வருவது விஷேட அம்சமாகும்.

அன்று முதல் கடந்த 5 தசாப்த காலங்களுக்கு மேலாக நடைமுறையில் ஏற்படக்கூய பல்வேறு பிரச்சனைகளைத் திர்க்கும் வகையில் சுற்றாடல் தினத்தை உலகமக்கள் அனுஷ்டித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வரிசையில் ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் பாதுகாப்புத் திட்டமானது இவ்வருடத்தை பிலாஸ்டிக் மாசுபடுவதனை வெற்றிகொள்வோம் என்பதாகும்.

அதற்கமைவாக எமது நாட்டிலும் எதிர்கால சந்ததியினரின் நலன்கருதி பிலாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்தியாளர்கள் முதல் அவற்றை பயன்படுத்துபவர்கள் வரை அறிவூட்டும் நிகழ்ச்சித் திட்டங்கள் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிய வருகிறது.

மேலும் சுற்றாடலுக்குத் தீங்கு விழைவிக்காத உற்பத்திகளை ஊக்குவித்தல தவறான பயன்படுத்தல் முறைகளைக் கட்டுப்படுத்தல், முறையான அப்புறப்படுத்தல், சுழற்சி முறையில் மீள் உற்பத்திக்கு ஊக்குவித்தல் முதலான விடயங்கள் தொடர்பாகவும் அறிவூட்டுவது அவசியம் என உணரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எல்லா தொற்று நோய்களும் சுற்றாடல் மாசு படுவதன் விளைவாலேயே ஏற்படுகிறது ; அமைச்சர் ஹாபிஸ் நசீர் எல்லா தொற்று நோய்களும் சுற்றாடல் மாசு படுவதன் விளைவாலேயே ஏற்படுகிறது ; அமைச்சர் ஹாபிஸ் நசீர் Reviewed by Madawala News on June 07, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.