நாடும் மக்களும் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் இந்நிலையில் சிலர் ஜூன் 8 ஆம் திகதி கொழும்பை சுற்றிவளைக்கப் போகிறார்கலாம் - இவர்களை மக்களே விரட்டியடிப்பர் ; ரோஹிதஜூன் 8 ஆம் திகதி கொழும்பை சுற்றிவளைக்கப் போவதாக கூறியுள்ள சிலருக்கு நாடும் மக்களும் இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டிருப்பது பிடிக்கவில்லை என்றும் அவர்களை, மக்களே விரட்டியடிப்பார்கள் என்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரான ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். 


பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (06) இடம்பெற்ற சிவில் விமான சேவை சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், “மக்கள் கஷ்டத்தில் இருக்க வேண்டும். எரிபொருளுக்கான, எரிவாயுக்கான, பால்மாவுக்கான வரிசைகளில் மக்கள் நாள்கணக்காக காத்திருக்க வேண்டும். அப்படியானால்தான் தமது விருப்பத்துக்கேற்ப நாட்டை வைத்திருக்க முடியும் என சிலர் நினைக்கின்றனர்.


இவ்வாறான நிலையில் தான் ஜூன் 8 ஆம் திகதி கொழும்பை சுற்றிவளைக்கப்போவதாக சிலர் கூறியுள்ளனர். இவர்களுக்கு நாடும் மக்களும் இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டிருப்பது பிடிக்கவில்லை. இந்த நிலைமையை கெடுக்க வேண்டும் என நினைக்கின்றனர். அதனால்தான் வீதிக்கிறங்கி சுற்றி வளைக்கப் போ கின்றனராம். 


ஜூன் 8 ஆம் திகதி கொழும்பை சுற்றிவளைக்கப்போவதாக கூறியுள்ளவர்களை இராணுவமோ பொலிஸாரோ விரட்டத்தேவையில்லை. மக்களே விரட்டியடிப்பார்கள் .


நோயாளி ஒருவருக்கு ஏற்றப்பட்டுள்ள ‘சேலைன் ‘ போத்தலை பிடுங்கி எறிய மக்கள் அனுமதிக்கமாட்டார்கள். அப்படி யாராவது செய்ய முயன்றால் மக்களுக்கு கோபம் வரும். அவர்களை விரட்டியடிப்பார்கள். அதேவேளை சில நோய்களை குணமாக்க சில சிகிச்சை முறைகள் உள்ளன. எனவே இவ்வாறான நோய்கள் உள்ளவர்களை குணமாக்க அந்த சிகிச்சை ஜனாதிபதி கையில் எடுக்க வேண்டும் .அதுதான் நோயைக் குணமாக்க ஒரே வழி” என தெரிவித்தார்.

நாடும் மக்களும் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் இந்நிலையில் சிலர் ஜூன் 8 ஆம் திகதி கொழும்பை சுற்றிவளைக்கப் போகிறார்கலாம் - இவர்களை மக்களே விரட்டியடிப்பர் ; ரோஹித நாடும் மக்களும் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் இந்நிலையில் சிலர் ஜூன் 8 ஆம் திகதி கொழும்பை சுற்றிவளைக்கப் போகிறார்கலாம் - இவர்களை மக்களே விரட்டியடிப்பர் ; ரோஹித Reviewed by Madawala News on June 07, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.