மே மாதத்தில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 26.2% ஆக (3.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக) அதிகரித்தது.
கடந்த மே மாதத்தில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 26.2% அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, கடந்த மே மாதம் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 3,483 மில்லியன் (3.5 பில்லியன்) அமெரிக்க டொலர்களாக பதிவானதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஏப்ரலில் இந்நாட்டின் அதிகாரப்பூர்வ கையிருப்பு 2.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.
சீனா வழங்கிய 1.4 பில்லியன் நிதி வசதியும் இதில் அடங்கும்.
மே மாதத்தில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 26.2% ஆக (3.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக) அதிகரித்தது.
Reviewed by Madawala News
on
June 07, 2023
Rating:

படுகடன்களாகச் செலுத்த வேண்டிய 320 அல்லது அதற்கு அண்மிய டொலர் தொகையை இன்னமும் செலுத்தாது அதில் சிறிய தொகையையும், அத்தியவசிய மருந்துகள், உணவுபொருட்கள் வாங்காது அந்தப் பணத்தையும், சீனா கடனாகத் தந்த 1.4 பில்லியன் டொலர்களையும் அலுமாரியில் வைத்துக் கொண்டு அந்த டொலர் தாள்கைள 3.5 பில்லியன் கையிருப்பில் இருக்கின்றது அது சென்ற மாதத்தைவிட அதிகரித்திருக்கின்றது என பொதுமக்களுக்கு கணக்குக் காட்டுவது மத்திய வங்கியா அல்லது பொதுமக்களை ஏமாற்றும் வேறு சக்திகளா என்பதும் எமக்குத் தெரியாது. உள்நாட்டு உற்பத்திகளில் அதிகரிப்பு, ஏற்றுமதிகளில் அதிகரிப்பு, வௌிநாட்டு மூலதனங்கள் எவ்வாறு முன்னேறியிருக்கின்றன என்பது பற்றி எந்த தகவல்களும் கிடையாது. நாட்டின் நிதி நிலைமையை உறுதிப்படுத்தும் மேற்படி மூன்று காரணிகள் பற்றிய சரியான தகவல்களை மத்திய வங்கி தெரிவிக்கின்றதா,அவற்றை ஊக்குவித்து அதிகரிக்க என்ன நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு அவற்றில் எத்தனை வீதம் வெற்றி கண்டுள்ளது என்பது பற்றிய சரியான தகவல்கள் பொதுமக்களிடம் இல்லை. எனவே தொடர்ந்தும் மக்களை மாடாக்கும் தகவல்களை அரசாங்கம் உடனடியாகத் தவிர்ந்து கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.
ReplyDelete