இன்று நாட்டின் சில பிரதேசங்களில் 100 mm வரையிலான மழை பெய்யலாம் என எதிர்பார்ப்பு.



மத்திய,  சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்  அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை  பெய்யக்கூடும்.


சப்ரகமுவ மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன்    காலி, மாத்தறை மற்றும்  களுத்துறை  மாவட்டங்களின் சில இடங்களிலும்  100 mm வரையிலான  ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


வடமேல் மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் .


ஊவா மாகாணத்தின்  பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ங்களின் பல இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. 


வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை, புத்தளம் மற்றும் திருகோணமலை  மாவட்டங்களிலும்  மணித்தியாலத்திற்கு 40 ‐ 45 km  வேகத்தில் அடிக்கடி  பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.  


கடல் பிராந்தியங்களில் 

****************************

அரபிக்கடலில் தாழ் அமுக்கம் ஒன்று சூறாவளியாக வலுவடைந்துள்ளது. இதற்கு வங்காளதேஷ் அரசினால் முன் மொழியப்பட்ட "விபர்ஜோய் " எனும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது மேலும் தீவிரமடைவதுடன் வடக்கு நோக்கி நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இக் கடல் பிராந்தியத்தில் மணித்தியாலத்திற்கு 75 - 80 km இலும் கூடிய வேகத்தில் காற்று வீசுவதுடன் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும்  காணப்படும். இதேவேளை இடியுடன் கூடிய பலத்த மழையும் பெய்யக்கூடும். 


ஆகையினால் மீனவர்கள், கடல் சார்ஊழியர்கள் மற்றும் நீண்ட நாட்களுக்கு கடலுக்கு செல்லும் மீனவர்களும் மறு அறிவித்தல் கிடைக்கும் வரையில் இக் கடல் பிராந்தியங்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப் படுகின்றனர்.  


புத்தளம்   தொடக்கம் கொழும்பு,  காலி ஊடாக மாத்தறை  வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் அடிக்கடி  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.


கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 ‐ 35 km வேகத்தில் தென் மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும். 


புத்தளம்  தொடக்கம் மன்னார், காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான அத்துடன் ஹம்பாந்தோட்டை  தொடக்கம் பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு  50 ‐ 60 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள்  கொந்தளிப்பாகக்  காணப்படும். 


புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 ‐ 50 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு  கொந்தளிப்பாக் காணப்படும். 


ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்யக்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.


மொஹமட் சாலிஹீன்,

சிரேஸ்ட வானிலை அதிகாரி.

இன்று நாட்டின் சில பிரதேசங்களில் 100 mm வரையிலான மழை பெய்யலாம் என எதிர்பார்ப்பு. இன்று நாட்டின் சில பிரதேசங்களில் 100 mm வரையிலான  மழை பெய்யலாம் என எதிர்பார்ப்பு. Reviewed by Madawala News on June 07, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.