பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவரை பதவி நீக்கம் செய்யும் (அரச தரப்பு) பிரேரணைக்கு எதிராக வாக்களித்த அலி சப்ரி ரஹீம்.பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து ஜனக ரத்நாயக்கவை நீக்குவது தொடர்பான பிரேரணைக்கு எதிராக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் வாக்களிக்களித்துள்ளார்.

சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட தங்கம் மற்றும் ஸ்மார்ட் கைப்பேசிகளுடன் சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் இன்று 7.5 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தார்.

துபாயிலிருந்து ஃப்ளை டுபாய் விமானத்தில் நேற்று (23) காலை இலங்கை வந்த போது, ​​ இலங்கை சுங்கத்தின் வருவாய் கண்காணிப்பு திணைக்கள அதிகாரிகளால் அவரை கைது செய்திருந்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமினால் சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட தங்கத்தின் பெறுமதி 74 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

அவர் 91 கையடக்க தொலைபேசிகளையும் கொண்டு வந்துள்ளதாகவும், அந்த தொலைபேசிகளின் பெறுமதி 4.2 மில்லியன் ரூபா எனவும் இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் இலங்கைக்கு கொண்டு வந்த சட்டவிரோத பொருட்களின் மொத்த பெறுமதி 78.2 மில்லியன் ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சரக்குகளை பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டது.

இதேவேளை இன்று விடுவிக்கப்பட்ட அவர் இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு ஜனக ரத்நாயக்கவிற்கு ஆதரவாக , பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தற்போதைய தலைவரை பதவி நீக்கம் செய்யும் பிரேரணைக்கு எதிராக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவரை பதவி நீக்கம் செய்யும் (அரச தரப்பு) பிரேரணைக்கு எதிராக வாக்களித்த அலி சப்ரி ரஹீம். பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவரை பதவி நீக்கம் செய்யும் (அரச தரப்பு) பிரேரணைக்கு எதிராக வாக்களித்த அலி சப்ரி ரஹீம். Reviewed by Madawala News on May 24, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.