யாழ். தையிட்டி விகாரை இன்று காலை இரகசியமாக திறந்து வைப்பு.



 சர்ச்சைக்குரிய யாழ்.  தையிட்டி விகாரை இன்று (25) காலை 5.30 மணிக்கு திறந்துவைக்கப்பட்டது.


இரகசியமாக தென்னிலங்கையில் இருந்து அழைத்துவரப்பட்ட  மக்களின் பங்குபற்றலுடன் தையிட்டி விகாரை திறந்து வைக்கப்பட்டுள்ளது.


எனினும், குறித்த நிகழ்வுக்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.


இதேவேளை, தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளை மீள விடுவிக்கக் கோரி 3 ஆவது நாளாகவும் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


இந்தநிலையில், குறித்தப் பகுதியில் பாதுகாப்பில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ். தையிட்டி விகாரை இன்று காலை இரகசியமாக திறந்து வைப்பு.  யாழ்.  தையிட்டி விகாரை இன்று  காலை இரகசியமாக திறந்து வைப்பு. Reviewed by Madawala News on May 25, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.