VIDEO : என் பையில் என்ன இருந்தது என்று எனக்குத் தெரியாது - அநீதியாக கைது செய்யப்பட்ட என்னை அரசாங்கம் காப்பாற்றவில்லை . இனிமேல் இந்த அரசாங்கத்திலிருந்து பயனில்லை.
தங்கம் மற்றும் மொபைல் தொலைபேசி கொண்டுவந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அலி சப்ரி ரஹீம், இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்ட நிலையில் , ஜனக ரத்நாயக்கவிற்கு ஆதரவாகவும் , பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவரை பதவி நீக்கம் செய்யும் அரசின் பிரேரணைக்கு எதிராகவும் வாக்களித்திருந்தார்.
இது தொடர்பில் அவரிடம் கேட்ட போது,
பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவிடம் பிழை எதுவும் எனக்கு தெரியவில்லை,
அதேவேளை நேற்று எனக்கு சம்பவம் ஒன்று இடம்பெற்றது.
நான் நாட்டுக்குள் வரும்போது, தங்கம் ஒரு தொகையை கைப்பற்றினார்கள்,
அதில் நான் செய்த தவறு ஏதும் இல்லை.
எனது வேலைக்காரர் ஒருவர் அதை declared செய்து எடுத்துக் கொண்டு வந்த நிலையில் அவரை பிடித்தார்கள் ஆனால் ஊடகங்களுக்கு என்னையே காட்டினார்கள்.
நான் உடனே இது தொடர்பில் ஜனாதிபதி செயலாளர் மற்றும் பிரதமரை தொடர்பு கொண்டேன்
அனைவரும் தொடர்பில் பார்ப்பதாக கூறினாலும் என் விடயத்தை கணக்கெடுக்கவும் இல்லை.
இறுதியில் எந்த தவறும் செய்யாத நான் 75 இலட்சம் அபராதம் செலுத்தியே வெளியே வந்தேன்.
அதனால் நான் அரசாங்கத்துக்கு எதிராக வாக்களித்தேன்.
என்னுடன் நம்பிக்கையாக வந்த வேலையால் ஒருவரே இதனை பொதி செய்தார். அவரே எனது லக்கேஜ் இலும் வைத்து கொண்டு வந்தார்.
என்னை கைது செய்த போது நான் எனக்கு ஏற்பட்ட அநீதி தொடர்பில் ஜனாதிபதி செயலாளர் மற்றும் பிரதமரிடம் முறையிட்டும் அவர்கள் என்னைக் காப்பாற்றவில்லை.
இதனால் இந்த அரசாங்கத்திலிருந்து பயனில்லை என மேலும் தெரிவித்தார்.
VIDEO : என் பையில் என்ன இருந்தது என்று எனக்குத் தெரியாது - அநீதியாக கைது செய்யப்பட்ட என்னை அரசாங்கம் காப்பாற்றவில்லை . இனிமேல் இந்த அரசாங்கத்திலிருந்து பயனில்லை.
Reviewed by Madawala News
on
May 24, 2023
Rating:

No comments: