நாடு முன்னேற்றகரமான பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ளது... இருந்ததை விட முன்னெறியுள்ளோம் ; நிதி இராஜாங்க அமைச்சர்



“அரச நிதி ஸ்தீரமான நிலையை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றது என்றும், இதன்படி நாடு முன்னேற்றகரமான பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ளது எனவும்” நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற நிதி அமைச்சின் கட்டளை சட்டங்கங்கள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” யாகூ பைனஸ் இணையத்தளத்தில் எமது நாடு ஆசியாவில் வறுமை நாடுகளின் பட்டியலில் 20 நாடுகளிடையே இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய அறிக்கையொன்றாக அது வெளியிடப்பட்டுள்ளது. இது 2021 ஆம் ஆண்டில் தனி நபர் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இப்போது நாங்கள் 2023 ஆம் ஆண்டில் இருக்கின்றோம். அந்த நிலைமையை விடவும் கடினமான நிலைமையில் இருந்து மீண்டு வருகின்றோம். இப்போது நாங்கள் முன்னேற முயற்சிக்கின்றோம். இருந்த நிலைமையை விடவும் முன்னெறியுள்ளோம்.


நாங்கள் அரச நிதி ஸ்தீரமான நிலையை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றோம். ஒவ்வொரு படியாக ஏறி வருகின்றோம். நாங்கள் இப்போது முன்னேற்றகரமான பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ளோம் என்றார்.

நாடு முன்னேற்றகரமான பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ளது... இருந்ததை விட முன்னெறியுள்ளோம் ; நிதி இராஜாங்க அமைச்சர் நாடு முன்னேற்றகரமான பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ளது... இருந்ததை விட முன்னெறியுள்ளோம் ; நிதி இராஜாங்க அமைச்சர் Reviewed by Madawala News on May 26, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.