(கடிதம் இணைப்பு) எனது மரணத்திற்கு மனைவியே காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட கணவன் #இலங்கை
திருகோணமலை-நொச்சிக்குளம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலமொன்று இன்று (25) அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 27 வயதான ராசதுரை சுதாகரன் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குடும்ப தகராறு காரணமாக மனைவி தனது பிள்ளையுடன் மட்டக்களப்பில் வாழ்ந்து வந்துள்ளதாகவும் தொலைபேசியில் இருவருக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டிருந்த நிலையில் குறித்த இளைஞர் தூக்கில் தொங்கி இருக்கலாம் எனவும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.
இருந்த போதிலும் குறித்த சடலத்தை திருகோணமலை திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எஸ்.எம்.றூமி பார்வையிட்டதுடன், பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறும் பொலிஸாருக்கு கட்டளையிட்டார்.
இந்நிலையில் குறித்த மரணத்திற்கான காரணத்தை உயிரிழந்த நபரின் இடத்தில் எழுதி வைத்துள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
(அப்துல்சலாம் யாசீம்)
(கடிதம் இணைப்பு) எனது மரணத்திற்கு மனைவியே காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட கணவன் #இலங்கை
Reviewed by Madawala News
on
May 25, 2023
Rating:

No comments: