பாராளுமன்ற சிறப்புரிமைகளை தவறாக பயன்படுத்தி தங்கக் கடத்தல் - அலி சப்ரி ரஹீமுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு சஜித் அணியினர் சபாநாயகரிடம் கோரிக்கை.



புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கடிதம் ஒன்றை கையளித்துள்ளனர்.



சட்டவிரோதமான முறையில் தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை இலங்கைக்குள் கொண்டுவர முற்பட்ட வேளையில் நேற்று (24) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்கப் பிரிவினரால் பாராளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டார்.


இவர் 3 1/2 கிலோ தங்கம் மற்றும் 91 ஸ்மார்ட் தொலைபேசிகள் இலங்கைக்கு கொண்டு வந்த நிலையில், அவர் 7.5 மில்லியன் ரூபா அபராதம் செலுத்திய பின்னர் விடுவிக்கப்பட்டார்.


பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி பாராளுமன்ற உறுப்பினர் சிறப்புரிமைகளை தவறாக பயன்படுத்தியுள்ளதாக சபாநாயகரிடம் கடிதம் சமர்ப்பித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தெரிவித்துள்ளது.




பாராளுமன்ற சிறப்புரிமைகளை தவறாக பயன்படுத்தி தங்கக் கடத்தல் - அலி சப்ரி ரஹீமுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு சஜித் அணியினர் சபாநாயகரிடம் கோரிக்கை.  பாராளுமன்ற சிறப்புரிமைகளை தவறாக பயன்படுத்தி தங்கக் கடத்தல்  - அலி சப்ரி ரஹீமுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு சஜித் அணியினர் சபாநாயகரிடம் கோரிக்கை. Reviewed by Madawala News on May 25, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.