அலி சப்ரி ரஹீம், மீண்டும் டுபாய் சென்று விட்டதாக தகவல்...



புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், மீண்டும் டுபாய் நோக்கிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஃப்ளை டுபாய் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம், நேற்று முன்தினம் அவர் டுபாய்க்கு பயணமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

3.5 கிலோ கிராம் தங்கம் மற்றும் 91 கைபேசிகளை, டுபாயிலிருந்து சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவந்த குற்றச்சாட்டில், முஸ்லிம் ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகளால், கடந்த 23ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பில் இடம்பெற்ற விசாரணைகளின் பின்னர், 7.5 மில்லியன் ரூபா அபராதம் விதித்து அவர் விடுவிக்கப்பட்டார். எனினும், அவர் கொண்டுவந்த தங்கம் மற்றும் கைபேசிகள் அரசுடமையாக்கப்பட்டன. குறித்த தங்கம் மற்றும் கைபேசிகள், தம்முடையதல்ல என்றும், அது தம்முடைய நண்பருடையதாகும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் மஹிந்த அமரவீர,
இதுபோன்ற விடயங்கள் தொடர்பில், அவசியமான சட்டங்கள் எதிர்காலத்தில் கொண்டுவரப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.


பாராளுமன்ற உறுப்பினர்களுக்கென, விசேட சிறப்புரிமை அவசியமில்லை. அதேபோன்று, பாராளுமன்ற உறுப்பினருக்கு உள்ள சிறப்புரிமையைப் பயன்படுத்தி, இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுமானால், குறித்த நபரின் பாராளுமன்ற உறுப்புரிமையை இரத்துச் செய்வதற்கான சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்ரசேன,
தங்கம் அரசுடமையாக்கப்பட்டு, 75 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதுடன், பிரச்சினை முடிவுறுத்தப்படக் கூடாது என தெரிவித்துள்ளார்.


இவ்வாறான குற்றம் இழைக்கப்பட்டால், சிறைத் தண்டனை அல்லது வேறு தண்டனை விதிப்பது குறித்து, சம்பந்தப்பட்ட தரப்பு அவதானம் செலுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அலி சப்ரி ரஹீம், மீண்டும் டுபாய் சென்று விட்டதாக தகவல்... அலி சப்ரி ரஹீம், மீண்டும் டுபாய் சென்று விட்டதாக தகவல்... Reviewed by Madawala News on May 27, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.